பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

16 அறிஞர் அண்ணா காட்சி - 5 இடம் : மற்றோர் வீட்டுக்கூடம். இருப்போர்: வயோதிகன்; அவனுடைய இரண்டாந் தாரம். [இரண்டாந்தாரம் நாகரிகமாக உடுத்திக் கொண்டு, கர்நாடக உடையிலே இருக்கும் கணவனைப் பார்த்துக் கூறுகிறாள்.] ம : தா! உனக்கு வேறே எதுவும் அகப்படலையா? மேலுக்குப் போட்டுக்கொள்ள இதுதானா கிடைச்சுது? க: ஏன்? இதுக்கு என்னாவாம்? ம : ரொம்ப அழகாத்தான் இருக்கு. போயி, சரிகை வேஷ்டியை எடுத்துப் போட்டுகிட்டுவா. எதுக்குப் பொட்டியிலே பூட்டி வைச்சிருக்கே பூஜை போடறயா? (கணவன் உள்ளே போகிறான். ஜரிகை வேஷ்டி எடுக்க. மனைவி அதற்குள் ஆடையைச் சரிப் படுத்திக் கொள்கிறாள். அவன் வருகிறான்.] க: அம்மா கண்ணு! கண்ணு! [ஒரு இளம் விதவை வருகிறாள்.] க: என்னாம்மா செய்து கொண்டிருந்தே? பெண் : பக்த விஜயம் படிச்சிகிட்டு இருந்தேம்பா. க:படிம்மா படி. இப்ப யாரு கதை படிக்கறே...?' பெண் : துளசிதாஸ் கதை. சு:படிம்மா படி. போறகதிக்கு நல்லது. உங்க சின்னம்மா சினிமா பாக்கணும்னா, தான் போயிட்டு வாரேன் கூட ஜாக்ரதையா கதவைத் தாள் போட்டுகிட்டு படுத்துக்கிட்டு இரு,வந்துவிடறேன். Qu: செய்யப்பா. அதுக்கு என்னாடி முகத்தை அத்தினி கோணலாக்கிக்கிட்டே?