பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஓர் இரவு 17 க: வா, தா. வா! வீணா சண்டைக்கு நிற்கறேயே. [கணவனும் மனைவியும் போகின்றனர். இளம் விதவை ஏக்கத்துடன் இருந்துவிட்டு....) பெ : கிளம்பி விட்டாரு மைனங் மாதிரி. அவதான் அப்பாவைப் பம்பரமா ஆட்டிவைக்கறாளே. ஆவட்டும் ஆவட்டும், ரெண்டு பேருக்கும் புத்தி வருகிறாப்போல செய்து காட்டறேன்.நான் இங்கே பக்த விஜயம் படிக்கவேணுமாம். அவங்க ரெண்டுபேரும் சினிமா பார்க்கப் போகணுமாம். எப்படி இருக்குது நியாயம்? இடம் : சாவடி. காட்சி - 6 இருப்போர்; ஊர் வம்பர்கள். (பலர், நிலா வெளிச்சத்திலே தமாஷாகப் பாடுகிறார்கள்; இரண்டு கட்சியாகப் பிரிந்து கொண்டு, சைவ வைணவத்தைப் பற்றிய தர்க்கப் பாட்டை] அரிநாராயண கோவிந்தா என்றுசொல்லி நாமம் போட்டுக் கோணும் திருநாமம் போட்டுக் கோணும் (பாட்டு முடிந்த பிறகு] பழனி : அப்பேன்! சைவம் பெரிசா வைஷ்ணவம் பெரிசா என்பது பற்றி, முன்னாலே ஒரு நாள் எனக்கும் எம்பெருமாள் பிள்ளைக்கும் தர்க்கம் நடந்தது தெரியுமா? வெங்கடேசன் : தர்க்கம் நடந்துதா? என்னா முடிவுக்கு வந்திங்க? பழனி : என்னா முடிவா? முடிவிலே, அவன் ஆஸ்பத்திரிக்குப் போனான் கட்டுக் கட்டிக்கொள்ள; நானு மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போனேன், கேஸ்கட்டைத் தூக்கிக்கிட்டு. 3.2.