பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஓர் இரவு பக்கம் ஜோடி ஜோடியாக உலாவுமே. கா: ஆமாம்பா! (போகிறார்கள்.) காட்சி - 8 இடம் :- பூந்தோட்டம் இருப்போர்:- டாக்டர் சேகர், சுசீலா. 19 (நிலவு அழகாகப் பிரகாசிக்கிறது. டாக்டரும் சுசீலாவும் களிப்புடன் பாடுகின்றனர். காட்சி துவக்கம் "வானில் உறைமதியே" என்ற பாட்டுடன். பாடல் முடிந்ததும், சில விநாடி மெளனம் பிறகு...] சே : (சுசீலாவின் கூந்தலைக் கோதியபடி) சந்திரன் உதயமானவுடன், விரிந்த தாமரை குவிந்து விடுகிறதே. அது ஏன் சொல் பார்ப்போம். சு: என்? சே: கதிரவனைக் கண்டதும் கமலம் களிப்படைகிற தல்லவா? சு: ஆமாம். சே: அதுபோலவே, சந்திரனைக் கண்டதும், பத்மாவதிக்கு வெட்கம் உண்டாகிறது. கூ: யாரவள் பத்மாவதி? சே: தாமரை! பத்மம் என்றால் தாமரைதானே. சு அதுவா?ஆமாம், ஏன் தாமரைக்கு வெட்கம் உண்டாகிறது? காண சே: என்ன கேள்விபோ! ஒரு ஆடவனும் அவன் ஆருயிர்க் காதலியும் சரசமாடுவதை வேறோர் பெண் நேரிட்டால், வெட்கித் தலைகுனிந்து கண்களை மூடிக்கொள்ள மாட்டாளா? சு:ஆமாம்! சே : அதே போலத்தான். சந்திரன் எனும் மணாளன், அல்லிப் பூவாகிய தன் மனையாளுடன் விளையாட் ஆரம்பிக்கிறான். சந்திரன் உதித்ததும் அல்லி மலருகிற