பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20 அறிஞர் அண்ணா தல்லவா? காதல் விளையாட்டுத்தானே அது. அல்லியும் சந்திரனும் இப்படிச் சரசமாடுவதைக் கண்டதும் பத்மாவுக்கு. வெட்கம்: கண்களை மூடிக் கொள்கிறாள். சு: சேகர் ! எவ்வளவு இன்பமயம் இன்று. சே: சுசீலா! நீலநிற வானத்திலே நீந்தி விளையாடும் அந்த நிலா எவ்வளவு அழகு பார் கண்ணே! சு: சுந்தரமான சந்திரனைப் பிடித்துக் கொள்ளத் தாவி வரும் அந்தக் கருப்பியைப் பார் கண்ணாளா? சே: மேகம், என்ன முயற்சித்தாலும், சந்திரன். அதனை விரட்டி அடித்துவிட்டு, வெற்றியுடன் பிரகாசிப்பான் சுசீலா! நமது காதலும் எப்படிப்பட்ட இடையூறு நேரிட்டாலும், அவற்றைத் தாண்டி வெற்றி பெறும் அல்லவா? சு: நான் பதில் சொல்லவா? சே: மொழிக்கு முன்பே, விழி பேசிவிட்டதே கண்ணே! சு: கண்ணாளா! இன்றிரவு நாம் கவலைதரும் பேச்சே பேசக் கூடாது. இந்த நிலவு. காதலுக்கு, கவிதைக்கு ஏற்பட்டது...(ஓடி விளையாடுகிறாள்.) சே : (ஓடிச் சென்று அவளைப் பிடித்துத் தன்மேல் சாய்த்துக் கொண்டு) இந்தப் பால்வண்ண நிலவிலே. ஒரு ஆற்றோரத்தில் வெண்மணலிலே, நீயும் நானும்... சு: நான் வீணை வாசிக்கவேண்டுமா? சே: பேசினால் போதும் கண்ணே! வீணை எதற்கு! சு: நிலவு, உமக்கு, கவிதா சக்தியைத் தருகிறானே. ஆமாம்! அவன் எதுவும் செய்வான். மகா துஷடனல்லவா அவன். சே: ஏன்? நமக்கு எவ்வளவு நன்மை செய்கிறான்? எல்லோருக்கும் இன்பரசம் தருகிறானே! சு : அப்படியும் சொல்லிவிட முடியாது. பிரிந்திருக்கும் காதலருக்கு, நிலவு நெருப்பாக அல்லவா இருக்கும். மேலும். இந்தச் சந்திரன், மகா காமுகன். சே : ஓஹோ! நீ அவனுடைய பால லீலையைச் சொல்கிறாயா? அவன்மீது என்ன குற்றம் சுசீலா? அவன்