பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஓர் இரவு 21 பாடம் படிக்கத்தான் போனான். அவள் அல்லவா அவனைக் கெடுத்தாள். சு: யாரைச் சொல்கிறீர்? சே : ஏன், குருபத்தினி தாரையைத்தான். ஏன்? புராணம்தானே, புளுகுதானே என்று கூறுகிறாயா? சு: அது மட்டும் இல்லை. அந்தக் கதையை யாரோ ஆடவர் எழுதியதால், தாரைதான் சந்திரனைக் கெடுத்தாள் என்று பழிசுமத்திவிட்டான். ஒரு பெண், எழுதியிருந்தால் தெரிந்திருக்கும்,உங்கள் சந்திரனின் யோக்யதை. சே : ஏது, சுசீலா! மாதர் குலத்தின் விடுதலைக்கே தலைமை வகித்துப் போரிடுவாய் போலிருக்கிறதே. சு: பொதுவாகவே ஒன்று கேட்கிறேன், உண்மையைக் கூறவேண்டும். ஆண்கள் பெண்களை மயக்குகிறார்களா. பெண்கள் ஆண்களை மயக்குகிறார்களா? சே : நல்ல கேள்வி கேட்டுவிட்டாய் சுசீலா! வீராதி வீரனும்,பெண்ணின் பிரேமைக்குப் பலியாகிறான். இதிலுமா சந்தேகம். மாதரின் இரு விழியும், மதுக்குடங்களல்லவா? சு: ஓஹோ! ஆண்கள் மட்டும் மகா யோக்கியர்களா? பேதைப் பெண்ணிடம் அன்பாகப் பேசி. "மாதே! உன்னை நான் உயிராகக் கருதுகிறேன். நீயே என் இன்பம். என் இருதய கீதம். உனக்காக நான் எதுவும் செய்வேன். வேறோர் மாதைக் கண்ணெடுத்தும் பாரேன். இதை நம்பு. இது சத்யம். (ஆண்கள் பேசும் பாவனையிலேயே கேலியாகப் பேசிக் காட்டிவிட்டு) என்று பேசி, பெண் தன் மனதைப் பறிகொடுத்துவிட்ட பிறகு.. சே : கயவன் அல்லவா, கண்ணே! காதலித்தவளைக் கைவிடுவான். போதும், நமக்கு ஏன் அந்தப் பேச்சு. நாம் இப்படிப் பேசிக்கொண்டிருப்பது கண்டு, சந்திரன் கோபிக்கிறான். என்ன இது! இவ்வளவு தாராளமாக நான் ஆனந்தத்தை அள்ளி அள்ளி வீசுகிறேன், வெள்ளியை உருக்கி வார்க்கிறேன், இவ்வளவும் எதற்கு? என்று கேட்பான். சு: எதற்கு?