பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

22 சே: எதற்கா ? இதோ இதற்குத்தான். அறிஞர் அண்ணா (தழுவிக்கொண்டு முத்தமிடப் போகையில். சிறுவர்கள் ஓடிவருகிறார்கள் நிலாப் பாட்டு பாடிக்கொண்டு. சேகரும் சுசீலாவும் விலகி நின்றுகொண்டு குழந்தைகளை அழைத்து விளையாடுகிறார்கள்.] சே: யார் தம்பி! நீங்களெல்லாம்? சிறு : பசங்க. ஏன், மாமா, தெரியலையா உனக்கு. சு: அப்படி ! அப்படிக் கொடுங்கள் சாட்டை. ஏன். இவர்களைப் பார்த்தாத் தெரியவில்லையா, குழந்தைகள் என்று. சே : குறும்பு சுசீலா உனக்கு! குழந்தைகளே! நீங்கள் எங்கே இருப்பது? சிறு : நாங்களா? அடுத்த வீதியிலே இருக்கே பெரிய பள்ளிக்கூடம், அங்கே இருப்பது. நிலாவிலே விளையாட வந்தோம். மாமா ! ஒரு கதை சொல்லேன். சு: கேளுங்க கேளுங்க, மாமாவுக்கு நல்ல நல்ல கதை தெரியும். சே: தம்பி! எனக்குக் கதை தெரியாதே. ஒரே ஒரு கதை தெரியும். ஒரு பெண் ஒரு ஆணை மயக்கிய கதை. சொல்லட்டுமா? (சுசீலாவைப் பார்த்தபடி) சிறு : போ, மாமா!ராஜா கதை சொல்லு. சு: மாமாவுக்கு பாட்டுக்கூடத் தெரியும், ஜோராப் பாடுவார். சிறு : வேணாம். மாமா கதை சொல்லட்டும். அக்கா பாட்டுப் பாடட்டும். k சே: ஆ. அது சரியான யோசனை. முதலிலே பாட்டு. பிறகு கதை. சிறு : அக்கா! பாடு அக்கா, ஒரே ஒரு பாட்டு. சு: சரி, நான் பாடுகிறேன். நீங்களும் கூடச் சேர்ந்து பாடணும் தெரியுதா?