பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஓர் இரவு 23 [குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டே பாடுகிறாள். குழந்தைகளும் பாடுகின்றன. இடையிடையே, பாட்டின் சில பகுதிகளை மாற்றித் தன் காதலைத் தெரிவிக்கும் கருத்துடன், குழந்தைகள் அறிந்து கொள்ளாதபடி பாடுகிறாள்.] க: ஆமாம்! நாம் இங்கே இப்படியே விளையாடிக் கொண்டிருக்கிறோமே, அப்பா என்ன சொல்வார்? சிறு : அக்கா. அப்பா பொல்லாதவரா? க: இல்லை கண்மணிகளே! அப்பா ரொம்ப நல்லவர். காட்சி -9 இடம் :- கருணாகரத்தேவர் வீடு. இருப்போர்-தேவர், ஜெமீன்தார் ஜெகவீரர், மாரி. (தேவர் கவலையுடன் உட்கார்ந்திருக்கிறார். கோபமாக ஜெகவீரர் பேசுகிறார்.] உலவிக்கொண்டே ஜெக : இரவு நேரம்,வீட்டிலே பெண் இல்லை. இப்படி இருக்கிறது குடும்ப இலட்சணம். தே : நிலாவிலே, வேடிக்கையாக நண்பர்களுடன் விளையாடப் போனாள் சுசீலா, அதிலே என்ன தவறு? ஜெ : சுத்தப் பைத்தியக்கார மனுஷர். இந்த நிலவிலே இளம் பெண்ணை வெளியே அனுப்புவதா? தே: மாரி! மாரி! (வேலைக்கார மாரி வருகிறாள்) மாரி! போய் சுசீலாவை அழைத்துக்கொண்டுவா. பூந்தோட்டத்தில் தான் இருப்பாள். அப்பா கோபமாக இருக்கிறார் என்று சொல். ஜெ: ரொம்ப அவசரம் என்று சொல். போ, போ [மாரி போகிறாள்.] தே: ஜெகவீரரே! நான் வாலிபப் பருவ முதலே கொஞ்சம் சீர்திருத்தக் கருத்துடையவன் என்பது உங்களுக்கே தெரியும். ஜெ : ஆமாம். ஆமாம், அதனாலே கானே விசுவை சொர்ணத்தைக் காதலித்தீர்.