பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

24 அறிஞர் அண்ணா தே: (சோகத்துடன்) தயவுசெய்து அவளைப்பற்றிப் பேச வேண்டாம். என் வேதனையை அதிகப்படுத்த வேண்டாம். ஜெக வீரரே! என் மகள் சுசீலாவை நான் அடுப்பூதும் பெண்ணாக்கவில்லை. படிக்க வைத்தேன். சுசீலா கர்நாடகமல்ல: புதுயுகப் பெண்ணாகி விட்டாள். அவளுக்குப் பெண்கள் முன்னேற்றத்தில் விசேஷ அக்கறை. ஜெ: இருக்கட்டுமே, அதற்கென்ன, ஒரு லேடிஸ் கிளப் ஆரம்பித்து சுசீலாவை பிரசிடெண்ட் ஆக்கிவிடுகிறேன். டென்னிஸ் ஆடட்டும், கிளப்பில் தே: அந்த ஆடம்பரமல்ல அவள் விரும்புவது. ஆடவர் பெண்களைக் கொடுமை செய்வது கண்டால் எப்படிச் சீறுகிறாள் தெரியுமா? அப்படிப்பட்டவளை நான், எப்படி வற்புறுத்துவது உம்மைக் கலியாணம் செய்து கொண்டாக வேண்டுமென்று. ஜெ: இதைச் சொல்லத்தான் இவ்வளவு முன்னுரையா? தேவரே! வாதங்கள் பயன்படாது. சுசீலாவை நான் அடைந்தே ஆக வேண்டும். தே: எனக்குத் துளியும் பிரியமில்லை. எப்படியப்பா, நான் சுகமாக வாழ்க்கை நடத்தமுடியும். இஷ்டமில்லாத கலியாணம் செய்து கொண்டு, சிறுகுழந்தைகள் கூடத் தங்களுக்குப் பிடிக்காத பண்டத்தை ஊட்டினால் துப்பிவிடுமே; என்றெல்லாம் சுசீலா கேட்பாளே! ஜெகவீரரே! உமது கண்களிலே கோபாக்னி கிளம்பி என்னை மிரட்டுகிறது. இதற்குப் பயந்து நான் சுசீலாவை வற்புறுத்தினால், அவள் கண்களிலே நீர் வழியுமே, அது தீயைவிடச் சுடுமே, நான் என்ன செய்வேன்? ஜெ: நடப்பது நடக்கட்டும் நமக்கென்ன என்று நீர் சும்மா இருந்துவிடும். (மீசையை முறுக்கிக் கொண்டு) நான் கவனித்துக் கொள்கிறேன். நான் சில பிடிவாதக்காரிகளைப் பார்த்திருக்கிறேன். சுசீலா ஒன்றும் பிரமாதமல்ல. (தேவர் தம் காதுகளைப் பொத்திக்கொண்டு) தே: வேண்டாம் ஜெகவீரரே! உமது வீரப்பிரதாபத்தை விவரிக்க வேண்டாம்.