பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஓர் இரவு 25 ஜெ : என் கோபத்தையும் நீர் கிளறவேண்டாம். நான் இவ்வளவு பொறுமையாக எப்போதும் இருந்ததில்லை.... காட்சி - 10 இடம் :- மாரி குடிசை. இருப்போர் மாரி, புருஷன் மன்னார். (மன்னார் குடித்துவிட்டு ஆனந்தமாகத் தெம்மாங்கு பாடுகிறான், பானையைத் தட்டிக் கொண்டு சுசீலாவை அழைத்து வரக் கிளம்பிய மாரி, புருஷன் வந்து விட்டானா என்று பார்க்க, தன் வீடு வருகிறாள். அங்கு பாடிக் கிடக்கும் புருஷனைக் கண்டு...] மா: பாட்டும் கூத்தும் பலமாத்தான் இருக்குது. மன் : மாரி! மானத்திலே சந்திரன் பாருடி. எவ்வளவு அழகா இருக்கிறான். நிலாக் காலம்னாலே ஒரு ஜோருதான். நீ கிடக்கறயே சுடுமூஞ்சி. இப்படி உட்கார்ந்து கேளடி பாட்டை, பக்கத்திலே வந்து உட்காரேன். (கையைப் பிடித்திழுக்க) LOIT : தா! வாலிபம் திரும்பிப் போச்சோ... போவுது....எனக்கு இப்ப விளையாட நேரமில்லை.... நான் போயி சுசீலாம்மாவை அவசரமா அழைச்சிக்கிட்டு வரணும். அப்பாலே வந்து... மன் = சனியன்: சந்தோஷமா இருக்கணும்னா என்னென்னமோ சாக்குச் சொல்லி வாயை அடைச்சி விடறே. இந்த நிலாக் காலத்திலே ஊர்லே உலகத்திலே அவங்க அவங்க எவ்வளவு சந்தோஷமா இருக்கறாங்க... மா : இருக்கறவங்க இருக்கறாங்க. நம்மாட்டம் ஏழைகளெல்லாம் என்னாச் செய்யறது. மன் : போடி பைத்தியக்காரி! பணக்காரரை எல்லாம் பார்த்துப் பரிகாசம் பண்ணிகிட்டு அல்லவா நிலா இருக்குது. எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக்கூட இருக்கட்டும்டி, நம்ம