பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

28 அறிஞர் அண்ணா சு: ஓஹோ! நேரம் போவதே தெரியவில்லை. இதோ அப்பா ஆள் அனுப்பிவிட்டார். நான் போகணும். மாரி : வாங்கம்மா, அவரு கோவமா இருக்காரு. அந்தக கொரங்கு வேறே வந்திருக்கு, குத்திவிட சு: யாரு! மா: ஜெமீன்தாருதான். சு :சரி, சேகர், வருகிறேன். சே: போகிறாயா? நானும்.... சு: நீங்கள் கொஞ்சநேரம் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருங்கள். சே : சரி, போய் வா. ஒரு இரவு முழுவதும் விளையாடினால்கூட இந்தப் பிள்ளைகளுக்குச் சலிப்புஏது? மா: நான் வந்து கூப்பிடுகிறவரை, ஐயாவுக்குந்தான் சலிப்பு இல்லை. [மாரியும் சுசீலாவும் போகின்றனர்.] காட்சி - 12 இடம்:- தேவர் மாளிகை. இருப்போர்:- தேவர். ஜெகவீரர். [சுசீலா உள்ளே நுழைந்ததும் ஜெகவீரா பேசுகிறார்.] ஜெ: (கேலியாக) சுசீலா தேவியாரா? சு: (மரியாதையுடன்) நமஸ்காரம். ஜெ: (கேலியாக) ஆசீர்வாதம்! உட்காரேன் இப்படி. [ஒரு நாற்காலியைக் காட்டுகிறார்.] சு: தலைவலி, மாடிக்குப் போகிறேன். ஜெ: விளையாடியது டாக்டரிடம். வருவது தலைவலியா. வேடிக்கைதான். தே: அம்மா சுசீலா! இதோபார். நான் உனக்கு இனியும் விவரமாகக் கூறிக் கொண்டிருக்கப் போவதில்லை.