பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஓர் இரவு 29 தெரிகிறதா.ஏதோ நானும் தாயில்லாதவளாயிற்றே என்று பொறுத்துக்கொண்டு வருகிறேன். இனி என்னால் முடியாது. நாளைக்கு உனக்கு நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்து விட்டேன். ஜெ : திருமணம் அடுத்த மாதமே முடித்துவிடலாம். பிறகு நான் மைசூர் போகவேண்டும், மகாராஜாவைப் பார்க்க. சு: ராஜ குடும்பத்திலே பெண் கொள்ள வேண்டிய வரல்லவா தாங்கள். நான் உங்களுக்கு ஏற்றவளல்ல. ஜே : ஏன் தேவரே! நமது சுசீலாவுக்குத் தன் அழகு தனக்கே தெரியவில்லையே. இங்கே பெரிய நிலக்கண்ணாடி. இல்லையோ? (சுசீலா மாடிக்குப் போக யத்தனிக்கிறாள்.] தே : நில்லம்மா. போகாதே. சம்மதம் என்று சொல்லிவிட்டுப் போ. அதற்காகவே வந்திருக்கிறார். சு: மாமா, பெரிய ரோஷக்காரர் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஜெ: ஆமாம்! சந்தேகமென்ன அதற்கு..... ': ரோஷக்காரர் என்று சொல்கிறார்களே தவிர துளி கூட ரோஷ்மே இல்லையே அவருக்கு... ஜெ: துடுக்குத்தனம். கூ : ஒரு பெண் ஓராயிரம் தடவை நான் உன்னைக் கலியாணம் செய்து கொள்ளமுடியாது. முடியாது. முடியாது என்று சொன்ன பிறகும்.... ஜெ: பிடிவாதம் ஒரு நோய்.வாலிபப் பருவத்திலே ஏற்படுவது வழக்கம். க : வேறொருவனை மனப்பூர்வமாகக் காதலிக்கிறேன் என்று வெளிப்படையாகச் சொன்ன பிறகும், வீராதி வீரர், மகா ரோஷக்காரர், என்று புகழப்படும் ஜெமீன்தாரருக்குத் துளியாவது ரோஷம் காணோம். தே : துஷ்டப் பெண்ணே!