பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

30 அறிஞர் அண்ணா ஜெ : முட்டாள். உன் வாய்க்கொழுப்பை அடக்கமுடியும் என்னால். மணம் முடியட்டும், பிறகு.... சு: பிணத்துக்குத் தாலிகட்ட இஷ்டமிருந்தால் உமது பிரதாபத்தைப் பேசிக்கொண்டிரும். ஜெ : தேவரே! இதுவரையில் நான் பொறுமையாக இருந்தேன். தே: போக்கிரிப் பெண்ணே! என் உயிருக்கு உலை வைக்கிறாயே. நான் என்ன செய்வேன். ஜெ : பிடித்தால் பொடிப் பொடியாவாள். இந்த அகம்பாவக்காரியை, இவள் அழகுக்காக அல்ல, என் அக்காவிடம் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அல்லவா நான் கலியாணம் செய்துகொள்ள வேண்டி இருக்கிறது. அழகாம் அழகு. ஆயிரம் அழகிகள் என் அடிவருடக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தே: கோபிக்காதீர். சிறு பெண். மேலும் சொந்த மாமன் தானே என்று பேசிவிட்டாள். திருமணம் நடப்பது உறுதி. ஜெ: (குரூரமான பார்வையுடன்) விவாக வகைகளிலே காந்தர்வமும் ஒன்று. சு: (கோபத்துடன்) ஆனால், அது இங்கே கிடையாது. ஜெ: (ஆத்திரத்துடன்) அதைப் பார்த்துவிட்டுப் போகத் தான் வந்தேன். தே: (பொறுமை இழந்து) ஏ! சுசீலா! அளவுக்கு மீறிப் போகாதே. நீ என்ன பிடிவாதம் செய்தாலும் சரி. உன்னை ஜெமீன்தாரர் ஜெகவீரருக்குத்தான் கலியாணம் செய்து தீருவேன். இதை யாரும் மாற்ற முடியாது. (கோபம் தணிந்து சோகக் குரலில்) நாளைக் காலையிலே நீ சம்மதம் தெரிவிக்காவிட்டால், மறுபடியும் என்னை உயிருடன் காணமாட்டாய். சு: (திடுக்கிட்டு) அப்பா! தே: (சோகம் சுப்பிய குரலில்) நீ என் மகளா? அல்லது என்னை மாய்க்க வந்த மாபாவியா என்பதை உன் செயலால் காட்டு. i