பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஓர் இரவு 31 சு : ஏனப்பா, எல்லாம் தெரிந்திருந்தும் இப்படிப் பேசுகிறீர். (தலை குனிந்தபடி) நான் டாக்டர்..... தே : சேகரனைக் காதலிக்கிறாய்; தெரியும்: சேகர் நல்லவன், தெரியும். (ஈனக்குரலில்) ஆனால் உன் தகப்பனாரின் தற்கொலைக்குப் பிறகுதான் அவனை நீ கலியாணம் செய்து கொள்ள வேண்டி வரும். (அருகே சென்று அபயம் அளிக்கும்படி வேண்டும் பாவனையில் நின்றுகொண்டு) கண்ணே! சுசீலா! உன் இஷ்டப்படி எல்லாம் நான் நடந்து வந்தேன்.உன் மனம் நோகும்படி இதுவரை நடந்து கொண்டதுண்டா? சுசீலா! தங்கமே! எனக்கு நீ தவிர வேறு யார்? சு : (திகைப்பும் பரிதாபமும் மேலிட்டு) அப்பா! அவருடைய மிரட்டலுக்கு ஏன் பயப்படுகிறீர்? மாமாவைச் சமாதானப்படுத்துவது முடியாத காரியமா? ஏன் அவரிடம் அவ்வளவு பயப்படுகிறீர்? அவர் என்ன செய்துவிடுவாரப்பா? அவர் ஜெமீன்தாரராக இருந்தால் நமக்கென்ன? நாமென்ன அவர் வீட்டுக் காவலாளியா? ஜெ : கடனாளி! ஆணவம் பிடித்தவளே. இந்த ஜெகவீரரின் பேனா முனை அசைந்தால், இந்த மாளிகை, தோட்டம். வண்டி, வாகனம், உன் ஒய்யார வாழ்வு,யாவும் பஞ்சு பஞ்சாகப் பறந்துவிடும். நிலைமை தெரியாமல் தடுமாறுகிறாய். சு:அப்பா, அப்பா! அதற்காகவா அப்பா! பயப்படுகிறீர்? கடனுக்காக நமது சொத்து பூராவையும் இந்தக் கிராத கனிடம் கொடுத்துவிடப்பா. உலகம் மிகமிகப் பெரிது அல்லவா? இதிலே எல்லோருமா ஜெமீன், மிட்டா. மிராசுடன் வாழ்கிறார்கள். அப்பா, செல்வத்தை இழக்க நேரிடுகிறதே என்று கலங்கி என்னைப் படுகுழியில் தள்ளாதீர். (வருத்தத்துடன்) எனக்கு ஆறுதல் மொழி கூற என் தாயும் இல்லை. அப்பா! நீரேதானே எனக்குத் தாயும் தகப்பனும்.