பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

32 அறிஞர் அண்ணா தே: ஐய்யோ! நெஞ்சு வெடித்துவிடும் போலிருக்கிறதே. நான் என்ன செய்வேன்? உன் தாய் இருந்திருந்தால் இந்த ஆபத்து வராதே. சு: (பயந்து) என்ன ஆபத்து? சொத்து போய்விடுவதா ஆபத்து? சிறு குழந்தைபோல அழாதீர் அப்பா! தே: சுசீலா! பேசுவது உன் தகப்பனல்ல. தள்ளாத வயதிலே புலியால் துரத்தப்பட்டு உயிருக்குப் பயந்து ஓடி வரும் ஒரு துர்ப்பாக்கியன் உன்னைக் கெஞ்சுகிறான். உன் காவில்..... (மண்டியிட முயற்சிக்கிறார். அவள் துடித்து அவரைத் தூக்கி நிறுத்துகிறாள்.] சு: ஐயோ! அம்மா! அப்பா! நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன்? தே: (பரிதாபப் பார்வையுடன்) அம்மா! எனக்கு உயிர்ப் பிச்சை தா. சு:அப்பா! பயங்கரமாக இருக்கிறதே. தே: சுசீலா சுண்ணே! உன்னை நான் உண்மையாகவே சொத்து ஜெமீன்தாரனுக்குப் போய்விடுமே என்ற பயத்தினாலே அல்ல அம்மா வற்புறுத்துகிறேன். மகளே! நான் அப்படிப்பட்ட பணப்பித்துப் பிடித்தவனல்ல. உன்னைவிட எனக்குச் செல்வம் பெரிதல்ல. க: வேறே என்ன காரணம் அப்பா? ஜெ: சத்தியம் செய்து கொடுத்துவிட்டார். சு : திருமணம் எனக்கு, அதற்கான சத்தியம் அவர் செய்தால் அதிலே அர்த்தமில்லை. தே: சுசீலா! உனக்கு விளங்கும்படி கூறுவதற்கில்லை. தூக்குமேடைக்கு நான் போகட்டுமா. அல்லது திருமணப் பந்தலுக்கு ஜெமீன்தாரருடன் நீ போகிறாயா? இரண்டில் ஒன்று சொல்லு. சு: (திகிலுடன்) என்னப்பா அது! தூக்கு மேடையா? ஏன்? !