பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஓர் இரவு 33 தே: அம்மா ! சுசீலா! என்னைப் பார்த்தால் தெரிய வில்லையா? நான் சித்திரவதை செய்யப்படுகிறேன். என்னால் சகிக்க முடியாது. (தலையிலே மோதிக்கொள்கிறார் - அவறி அழுகிறார் - மயங்கி நாற்காலியில் சாய்கிறார்.] சு: அப்பா, அப்பா! [ஓடிச் சென்று கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளித்து, மயக்கத்தைத் தெளியவைத்து. ஜெமீன்தாரைப் பார்த்து] கொட்டிவிட்ட பிறகு, தேளாவது ஒடி ஒளியும். அவரைத் துடிக்கச் செய்துவிட்டுத் தைரியமாக எதிரே உட்கார்ந்து கொண்டிருக்கிறாயே. (மயக்கம் தெளிந்த தேவர்) பவானி! பவானி! போதும் என்னை நீ பழி தீர்த்துக் கொண்டது. பாவி நான் இந்த க்ஷணம் இறந்தாலும் பரவாயில்லை. இந்த நிலைமையைவிட, அது எவ்வளவோ நிம்மதியாக இருக்கும். ஜெ : தூக்குமேடையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் தேவரே! ஆனால் உலகம் உமது பிணத்தின்மீது.... தே: (கலங்கி) காரித்துப்பும் - கல்லை வீசும். ஜெ : குடும்ப சாபம் உண்டாகும். பரம்பரைக்கே பழிச்சொல். தேவரே! நானொன்றும் குஷ்டம் பிடித்த வனல்ல. என்னைக் கலியாணம் செய்துகொண்டால், இந்த ரூபவதிக்கு ஒன்றும் பங்கம் வந்துவிடாது. இதற்கு இணங்காவிட்டால் இழிவும் பழியும் உமது. பிணத்துக்கு ஆலவட்டமாக இருக்கும். சு: அப்பா! மாமா! ஆண்டவனே! என்ன இது? தூக்கு மேடை! பிணம்! சாபம்! ஒன்றும் புரியவில்லையே. தே: (தடுமாற்றத்துடன்) என்னை - என்னைமட்டுமல்ல- நமது குடும்பத்தை - பின் சந்ததியைக்கூட, ஒரு கொடிய சாபம் தீண்டுவதற்குத் தயாராகச் சுற்றிக்கொண்டிருக்கிறது. சு:சாபமா? கட்டுக்கதை பேச இதுவா அப்பா சமயம்? 3.3.