பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

34 அறிஞர் அண்ணா ஜெ : கட்டுக்கதையுமல்ல, மனப்பிராந்தியுமல்ல. வேண்டுமானால் நான் புரிகிறபடி கூறுகிறேன் கேள்... தே : (ஜெமீன்தாரரைப் பார்த்து) வேண்டாம். வேண்டாம்.என் தாய் என்னைக் காப்பாற்றுவாள் - கைவிட மாட்டாள். (சுசீலாவைப் பார்த்து) மகளே! அந்தச் சாபத்தைப் போக்கிக்கொள்ள ஒரு பலி தந்தாக வேண்டும். சு; (ஆழ்ந்த சோகத்துடன்) அந்தப் பலி நானா? தே: ஆமாம். சு: சரி. ஜெ: சபாஷ்! தேவரே! சபாஷ்! காட்சி - 13 இடம் :- சுசீலா அறை. இருப்போர்: சுசீலா. [சுசீலா தனிமையாகத் அழுகிறாள்.] தேம்பித் தேம்பி சு: அந்தப் பாதகனிடம் என் தகப்பனாரின் உயிரையும் மானத்தையும் அழிக்கக்கூடிய ஏதோ ஓர் இரகசியம் சிக்கிக் கொண்டது. அப்பா, அதனால்தான் அவனைக் கண்டு நடுங்குகிறார். (பதை பதைத்து) என்ன மர்மம்? அது என்ன பயங்கர இரகசியம்? தெரியவில்லையே! (தாயார் பவானியின் படத்தைப் பார்த்து) அம்மா! அம்மா! என்னைப் பலி கேட்கும் அந்தப் பயங்கர இரகசியம் என்ன? (கண்ணாடியில் தன் உருவம் தெரியக் கண்டு) என்னை அழிக்கும் அழகே! இம்சைக்கு என்னை ஆளாக்கும் இளமையே! நாசமாகட்டும்! நாசமாகட்டும் இந்த அழகு. [புஷ்பத்தை வீசி எறிகிறாள்]