பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஓர் இரவு [மறு விநாடி] 35 ஐயோ! அழகு என்ன செய்யும்? குணசீலரான சேகரை என்னிடம் அந்த அழகல்லவா அழைத்துக்கொண்டு வந்தது? அவருக்கு நான் அர்ப்பணித்துவிட்ட பொருள் அல்லவா இந்த அழகு. மலர் முகம் என்று கூறுவார்; மந்தியிடம் தரச் சொல்கிறார் தந்தை: தராவிட்டால் தனக்கு மரண தண்டனை தருவார்களாம். அது சாபமாம்! ஐயோ! அது என்ன சாபம் அந்தச் சண்டாளன் ஏன் அப்பாவின் உயிரைத் தன் கரத்தில் வைத்துக்கொண்டு வதைக்கிறான்? அவன் ஒழிந்தால்! (முகத்திலே முதலில் பயம். பிறகு தெளிவு உண்டாகிறது.] அவன் ஒழிந்தால் அப்பாவுக்கும் ஆபத்து இல்லை. என் வாழ்க்கையும் பாழாகாது. கொலைதான்! செய்தால் என்ன? அவன் சாகாவிட்டால் மூன்று உயிரல்லவா வதைபடும். ஆமாம்! என்னை மண அறைக்கு அழைக்க வந்தவனை பிணமாக்குகிறேன். [மேஜை அறையைத் திறந்து, ஒரு பொட்டலம் எடுத்து, விஷ மருந்தைப் பாலிலே கலந்து விடுகிறாள்.] மையல் கொண்டுள்ள அந்த மடையனிடம் இதைத் தந்தால் போதும்...ஆனால்... அந்தப் பயங்கர இரகசியம்? [யோசிக்கிறாள்] சாபம் ஒருவேளை. அவன் இறந்துவிட்டாலும் இருக்குமோ? தன் ஆசை நிறைவேறாத முன்பு சாக நேரிட்டால், அப்பாவைத் தூக்குமேடைக்கு அனுப்பக்கூடிய அந்த இரகசியத்தை வேறு யாராவது உபயோகித்துக்கொள்ள ஏற்பாடு இருக்குமோ? அவன் கன்னெஞ்சக்காரன் மட்டுமல்லவே - நயவஞ்சகனாயிற்றே. (கைகளைப் பிசைந்துகொண்டு)