பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

36 அறிஞர் அண்ணா என்ன ஏற்பாடு செய்து வைத்திருக்கிறானோ? [கொஞ்ச நேரம் யோசனை செய்துவிட்டுக் கீழே செல்கிறாள்.] காட்சி - 14 இடம் :- தேவர் மாளிகைக் கூடம். இருப்போர் :- ஜெகவீரா,தேவர். (தேவர், மேஜைமீது தலையைக் கவிழ்த்துக் கொண்டிருக்கிறார். ஜெகவீரன் நாற்காலியில் சாய்ந்துகொண்டு, கால்களை மேஜைமீது போட்டுக்கொண்டு அட்டகாசமாக இருக்கிறான். சுசீலா வருகிறாள்.] ஜெ: சுசீலா! (தேவர் திடுக்கிட்டுத் தலையை நிமிர்த்தி சுசீலாவைப் பார்க்கிறார்.] சு: நான் பலியான பிறகு, தாங்கள் சொன்ன அந்தச் சாபம் கட்டாயம் நீங்கிவிடுமா அப்பா? தே: (ஒன்றும் புரியாமல்) 'தங்கமே! என்ன கேட்கிறாய்? ஜெ : நான் சொல்கிறேன் சுசீலா! (எழுந்து பேசுகிறான்.] 'கெம்பீரமாக உலவிக்கொண்டு உன் தகப்பனாரைத் தூக்குமேடைக்கு அனுப்பக்கூடிய இரகசியம் என்னிடம் இருக்கிறது. (சுசீலா திகைப்பது கண்டு) ஏன் திகைக்கிறாய்? ஆபத்தானது வெடிமருந்து.ஆனால் கொஞ்சம் தண்ணீரை அதிலே ஊற்றிவிடு. ஆபத்து வராது. சு: விஷயத்தைச் சொல்லுங்கள்.. ஜெ :மாமா. என்று சொல்லியிருந்தால் நன்றாக. இருந்திருக்கும். பரவாயில்லை வெட்கம் இருக்கும் என்று எண்ணிக் கொள்கிறேன். சு: அந்த இரகசியம்.....