பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

38 அறிஞர் அண்ணா (தீப்பொறி பறக்கும் கண்களுடன் பார்க்கிறான். திகைத்த மங்கை தள்ளாடிக்கொண்டு மாடிக்குச் செல்கிறாள்.] இடம் + சுசீலா அறை. இருப்போர் - சுசீலா. காட்சி - 15 (தள்ளாடி நடந்து வந்து சுசீலர். படுக்கை மீது விழுகிறாள்.] & சேகர்! சேகர்! என் நிலையைப் பார்! பலி ! பலி! உலகிலே கேட்டிராத பலி! பெண்ணின் விருப்பத்துக்கு மாறாகக் கலியாணத்தை நடத்துபவர்கள். அறிவிலிகள், ஆணவக்காரர்கள், பித்தர்கள், என்று ஆயிரம் தடவை கூறியிருக்கிறேன். என் தகப்பனார் படித்தவர். அறிவாளி, பெயருக்கு ஏற்றபடி கருணை உள்ளவர், அவர் என்னை பலிபீடத்திற்குப் போ என்று கூறுகிறார். ஐயோ! அவர் கோபத்தோடு அந்த வார்த்தையைச் சொன்னால், கோல் கொண்டு தாக்கினால், நான் 'பல காலமாகப் பெண்களைக் கொடுமை செய்து பழக்கப்பட்ட ஆண்களிலே இவரும் ஒருவர் என்று வெறுத்துத் தள்ளி விடுவேன். அவர் அழுகிறார்! எனக்குக் கட்டளை பிறப்பிக்கவில்லை. என் எதிரே கண்ணீர் விடுகிறார். மகளைத் தாயே என்று அழைக்கிறார். அவருடைய முழங்காலின்மீது கால் வைத்து ஏறி. அவர் மடியில் உட்காருவேன் சிறுமியாக இருந்தபோது. அப்படிப்பட்ட என்முன். என் தகப்பனார். ஐயோ! மண்டியிடுகிறாரே! தகப்பனாரின் உயிருக்கும் என் வாழ்வுக்கும் ஒரு பயங்கரமான முடிபோட்டிருக்கிறானே அந்தப் பாதகன்.