பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

40 "வானிலுறை மதியே, மதியே வாழ்வின் நிதியே" அறிஞர் அண்ணா என்ற பாட்டை, சோகமாக மெல்லிய குரலில் இரண்டடி பாடுகிறாள், நிலவில் நடைபெற்ற காதல் விளையாட்டை எண்ணிக்கொண்டு) வாழ்வின் நிதி! வாழ்வின் நிதி! அந்த வஞ்சகனின் சதிக்கு இரையாகிறேன். இதற்கோ இன்று அவரும் நானும்.... [சில விநாடி மெளனம்: பிறகு ஓர்வித உறுதி பெற்று) செ! சேகர் என் தியாகத்தைக் கேள்விப்படாமலிருக்க முடியாது. தந்தை ஒரு நாள் சொல்லியே தீருவார்.சேகர் என்னை நிந்திக்கமாட்டார், நிச்சயமாக.தியாகத்தின் மேன்மையை அவர் எப்போதும் சொல்வாரே எனக்கு. கோப்பையை எடுத்துக் குடிக்கப் போகும் போது, ஜன்னல் வழியாக ஒரு கள்ளன் நுழைவது காண்கிறாள்.திடுக்கிட்டுப் போன சுசீலா,உடனே சமாளித்துக் கொள்கிறாள். கள்ளன் அவளைக் கண்டதும், துப்பாக்கியைக் காட்டுகிறான். அவள் அலறவில்லை. புன்னகை புரிகிறாள். கள்ளனுக்கு இலேசாகக் கிலி பிடிக்கிறது. அவனையே உற்று நோக்கியபடி என்னமோ யோசிக்கிறாள் சுசீலா. அவன் அவளைப் வாங்குகிறான்.] சு:நில்! போகாதே! பார்த்தபடியே பின் க: அசையாதே (துப்பாக்கியைக் காட்டுகிறான்.) சு: சுத்தப் பயங்கொள்ளி.. களவாட வந்தவன் ஒரு பெண்ணைக் கண்டு ஓடுகிறாயே! இவ்வளவு கோழை ஏன் இந்த வேலைக்கு வந்தாய்? க: உம்! சுட்டுவிடுவேன். கள்ளனின் கை நடுங்குகிறது] சு: ஏன் நடுக்கமெடுக்கிறது? பயமா?