பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஓர் இரவு 41 க: (அசடு சொட்ட) எனக்கா பயம்? உனக்கல்லவா பயம் இருக்கிறது! பயப்படாதே! கூச்சலிடாமல் இரு நான் உன்னை ஒன்றும் செய்யாமல் போய்விடுகிறேன். சு: (நிதானமாக) எனக்கென்ன பயம்? இங்கே கள்ளன். கீழே காமுகன். உனக்கு என் உடைமை வேண்டும். அவனோ என்னையே அபகரிக்க வந்திருக்கிறான். நீ கருந்தேள், கீழே கருநாகம். (கள்ளன் திகைத்துப் போகிறான்.] சு: பயமாக இருக்கிறதா? உனக்கு உயிர்மீது இன்னம் ஆசை இருக்கிறது. எனக்கு அந்த ஆசை இல்லை. ஆகவே அச்சமும் இல்லை. நீ சுட்டாலும் சாவேன், சுடாவிட்டால் கூடச் சாவேன். [கோப்பையைக் காட்டி] இதோ பார்! இதுவும் ஒரு ஆயுதந்தான். க: என்ன இது? சு:விஷம்! க: அய்யோ! சு.: அடே. என்ன. அச்சம்! இன்னம் இரண்டு நிமிஷம் கழித்து வந்திருந்தால் இந்தக் கோப்பை கீழே உருண்டு கிடக்கும்; என் பிணம் இங்கே கிடக்கும், உன் வேலையும் சுலபமாகி இருக்கும். க: உனக்குப் பைத்யமா? சு: (தலையை அசைத்து) துளிகூடக் கிடையாது. ஆனால், ஜெமீன்தாரர் ஜெகவீரர் தாசானுதாசனாகிறேன் என்று சொல்கிறார். அவரைக் கல்யாணம் செய்துகொள்ள மாட்டேனென்று பிடிவாதம் செய்கிறாயே, சுசீலா! நீ ஒரு பைத்யம் - என்று அப்பா கூறுகிறார். அவர் மட்டுமா? என் ஆருயிர்க் காதலர் அடிக்கடி சொல்வார். "என்ன கண்ணே! பைத்யம் உனக்கு! உலகமே எதிர்த்தாலும் நான் உன்னை விடமாட்டேன்" என்று. அவர் ஒரு பிரபல டாக்டர். ஆனால் வேடிக்கை என்ன தெரியுமோ? எனக்குப் பைத்யம் துளிகூடக் கிடையாது.