பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஓர் இரவு சு:ஆமாம்... கூச்சலிட்டால்.... 43 சு: பயப்படாதே! இது பெரிய மாளிகை. ஒருதரம் இரண்டு தரம் கூச்சலிட்டால் கீழே கேட்காது. சரி! நான் கூச்சலிட்டால் கொன்றுவிடுவாய் பைத்யக்காரா! கொலை! தற்கொலை! இரண்டிலே எதுவாக இருந்தால் என்ன? இப்போது நான் சாகவேண்டும். அவ்வளவுதான். (சுசீலாவின் கண்களிலே கொஞ்சம் நீர் பெருகுவது கண்டு] கண்களிலே நீர்.... கூ: அப்பா! உனக்கு அக்கா, தங்கை, யாராவது இருக்கிறார்களா? க : ('இல்லை' என்று தெரிவிக்கத் தலையை அசைக்கிறான்.) சு: அம்மா? சு: ('இருக்கிறார்கள்' என்று தெரிவிக்கத் தலையை அசைக்கிறான்.) சு: எனக்கொரு உப்காரம் செய்கிறாயா? களவாட வந்தவனை ஒரு கன்னி உபகாரம் செய் என்று கேட்பது. படமெடுத்தாடும் நாகத்தைப் பார்த்து மாணிக்கம் கொடு என்று கேட்பது போலிருக்கிறதா? என் நிலைமை அப்படிப் பட்டது. அதனால்தான், யாரைக் கண்டால் பயத்தால் கூக் குரலிட வேண்டுமோ, அவனைக் கண்டு உதவி கேட்கிறேன். க: நம்ப முடியாத வேடிக்கையாக இருக்கிறதே. நான் என்ன உதவி செய்யமுடியும்? கள்ளனிடம்.... உதவி கேட்டால்...எனக்குப் புரியவில்லையே. சு; எனக்கு உதவி செய்வார் யாரும் இல்லை.இந்த விஷத்தைத்தான் உதவிக்கு அழைத்தேன். நீ விஷத்தைவிடக் கொடியவனா! நீ கட்டாயம் உதவி செய்யமுடியும். 'க: என்ன உதவி?

கள்ளனாக இருந்தது போதும் நாளைக்கு வேண்டு மானால் கூடக் கள்ளன் வேலைக்குப் போ. வேண்டாம். உள்