பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

44 அறிஞர் அண்ணா ஆயுட்பரியந்தம் திருடவேண்டிய அவசியமின்றி உனக்குப் பொருள் தருகிறேன். வேலை தருகிறேன். எனக்கு மட்டும் இப்போது ஒரு உதவி செய். க:(புரியாமல்) நானா? உதவியா? என்ன உதவி? சு: கொஞ்சநேரம் என் காதலனாக இரு. க (பயந்துபோய்) தாயே! கும்பிடுகிறேன். நீ வனதேவதையோ, மோகினியோ, என்னை ஒன்றும் செய்து விடாதே, நான் தாய்க்கு ஒரே மகன்... இனி நான் சத்யமாகத் திருடுவதில்லை. ஐயோ! ஐயோ! முட்டாளே! நான் தேவதையுமல்ல, பிசாசுமல்ல. உன்னிடம் உதவி கேட்கும் ஒரு அபாக்யவதி. கொஞ்ச நேரம் ஒரு மணி நேரம் என்னைத் தாயே, பேயே என்று கூப்பிடாமல், கண்ணே! மணியே! என்று கூப்பிடு. அஞ்சாதே. கொஞ்சிப் பேசு. க: (திகைப்படைந்து) நானா? உன்னையா? சு: உண்மையாக அல்ல. பாவனையாக. க : ஏன்? சு:கூட்கார். நான் இந்த வீட்டுக்காரரின் ஒரே மகள் - தாய் இல்லை - நான் அழகாக இருக்கிறேனல்லவா? க: ஆமாம்..... சு: அதனாலேதான் எனக்கு ஆபத்து. பெண்களுக்கு அழகு, ஆபத்தையும் உண்டாக்கும். அந்த அழகால் மற்றவர்களுக்கும் ஆபத்து உண்டாகும். என்னைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமென்று என் மாமன், காமுகன், கயவன், பிடிவாதம் செய்கிறான். எப்படியோ என் அப்பாவைச் சரிப்படுத்திக் கொண்டான். க : அவனைக் கொன்றுவிடுகிறேன். அது முடியும் என்னால்.... சு: கொலை தெரியும், களவு தெரியும்; காதலிக்கமட்டும் தெரியாதா? இது தெரிந்துகொள்ளாமல் இவ்வளவு பெரிய ஆளாகி விட்டாயே.