பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஓர் இரவு 45 க: காதல் என்பது சூது - சுகபோகிகளின் சதி- கவிகளின் கற்பனை மாளிகையிலே தரப்படும் மது - என்று என் தாயார் எனக்குக் கூறி இருக்கிறார்கள். சு: பாவம், உன் அம்மாவை எவனாவது பாதகன் ஏமாற்றி விட்டிருப்பான். மனம் நொந்து சொன்ன வார்த்தை அது. ஆனால் காதல் சதி அல்ல, வலை: சிக்கினவர் தப்புவதில்லை: வானவில்; ஆனால் இருக்கும் வரையில் அழகு அற்புதமாக இருக்கும். கைகூடினால் விருந்து; இல்லையோ அதுவே விஷம். காதல் சந்திரன்போல ஜோதியாகவும் இருக்கும்: சிலசமயம் நெருப்பாகவும் எரிக்கும். [சுசீலா இப்படிக் கூறும்போது, கள்ளன் மெள்ள நழுவப் பார்க்கிறான். அதைக் கண்டுவிட்ட சுசீலா அவனை நோக்கி] சு: போகாதே..உட்கார். நீ போக முயற்சித்தால், நான் உச்சவிடுவேன் - நீ அகப்பட்டுக் கொள்வாய். நான் இதைப்பற்றி உனக்குச் சாவகாசமாகப் பிறகு கூறுகிறேன். ஒரு பித்தனின் பிடியிலே என் தகப்பனார் சிக்கிக்கொண்டார். ஒரே ஒரு வழிதான் இருக்கிறது நான் தப்பித்துக்கொள்ள. ஜமீன்தாரனாகப் பார்த்து, என்னை வேண்டாம் என்று சொல்லிவிடவேண்டும். அதற்குத்தான் இந்த ஏற்பாடு. என்னைப் பார்க்க, பேச, அவன் வரப்போகிறான். (சந்தடி ஏதாவது கேட்கிறதா என்று உற்றுக் கேட்கிறாள்.] இரு! இல்லை! சந்தடி காணோம். இன்னம் வரவில்லை. கொஞ்சம் நேரம் ஆகட்டும் என்று இருக்கிறான். அந்தக் கயவன் நான் தூங்கிய பிறகு வரலாம் என்றுகூட இருப்பான். அவன் வருகிற சமயமாகப் பார்த்து, நீ என்னிடம் காதலிப்பது போலப் பேசு. நானும் சரசமாடுபவள்போல் நடிப்பேன். அவன் உள்ளே வந்து அந்தக் காட்சியைக் கண்டால், உடனே என்னை வெறுத்துவிட்டுப் போய் விடுவான். நான் கேவலம் நள்ளிரவில் சோரநாயகனிடம் பேசிக் கிடப்பவள் என்று எண்ணி என்னைக் கலியாணம் செய்துகொள்வது என்று கொண்டுள்ள ஆசையை விட்டு