பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

46 விடுவான். உன் பெயர் என்ன? க: ரத்தினம். அறிஞர் அண்ணா சு: ரத்தினம்! இந்த உதவி செய், அல்லது என் உயிரைப் போக்கு. (சுசீலாவின் சோகநிலையை உணர்ந்து பரிதாபம் கொண்ட கள்ளன் நல்வழிப்பட்டு } க : என் தங்கை அம்மா இனி நீ. இவ்வளவு இளவயதில் விஷம் சாப்பிட்டு மடியவும், என் கைத் துப்பாக்கியால் சாகவும் துணியும் அளவுக்கு உனக்கு மனவேதனை ஏற்பட்டிருக்கிறது. இப்போதுதான் உணர்ந்தேன் உன் நிலைமையை. சு: நீ மிக நல்லவனப்பா. க: இதுதானம்மா முதல் தடவை என்னை நல்லவன் என்று பிறர் கூறக்கேட்டது. ஆனால் என் தாயின்மேல் ஆணை. இனி நான் களவாட மாட்டேன். சு: என்னைக் காப்பாற்ற? க: தயங்கமாட்டேன்.... சு: என் பெயர் சுசீலா? க: தயங்கமாட்டேன் சுசீலா! சு: அந்தக் காமக்குரங்கு ஏதாவது என்னிடம் சேஷ்டை செய்தால் வாலை நறுக்கு. க : பேஷ்! அது நமக்குப் பழக்கமான வேலை. இந்தக் காதல் விஷயம்தான் புதிது. சு : நான் அவனைக் கண்டதும் திடுக்கிடுவது போலிருப்பேன். க : சரி, சு: அவன் உன்னை அடிப்பான், கொஞ்சம் முன்கோபி. மேலும் இப்படிப்பட்ட சமயத்திலே கோழைகூடத் தைரியசாலி யாவானல்லவா? க: அடிப்பானா? என் சுபாவம் ஒரு மாதிரி சுசீலா அடி விழுந்தால் நான் மனுஷ்னல்ல, மிருகமாகிவிடுவேன்: கண்மண் தெரியாமல் தாக்குவேன்.