48
அறிஞர் அண்ணா
வராது. மோக மயக்கம் இருக்கும். தனியாகத்தானே இருப்பாள். தகப்பனோ நம்மிடம் பயந்து கிடக்கிறான், போய்த்தான் பேசுவோமே என்று தோன்றும் வருவான். மேலும். காந்தர்வ விவாகம் என்று வேறே சொல்லி இருக்கிறான்.
க : மடையன்! வரட்டும்.
(உட்காருகிறான்.)
காட்சி - 16
இடம் : சேகர் வீடு
இருப்போர் : சேகர்.
[சேகர் படுத்துப் புரள்கிறான், தூக்கமில்லை.
படிக்கிறான். முடியவில்லை. பாடுகிறான். திருப்தி
இல்லை. உலாவுகிறான் - யோசிக்கிறான்.]
சே : (தனிமொழி) சுசீலாவை ஏன் அவ்வளவு அவசரமாக அழைத்துக்கொண்டு போனார்கள். ஒருவேளை, தேவருக்கு உடம்பு ஏதாவது....செச்சே! உடம்புக்குச் சரியில்லை என்றால் என்னை அல்லவா அழைத்திருப்பார்கள். மாரி அவசரப்படுத்தி அல்லவா அழைத்துக்கொண்டு போனாள். எதற்கும் டெலிபோன் செய்து கேட்போமே.
[டெலிபோன் செய்கிறான்.]
"ஹலோ! ஹலோ!"
"ஆமாம்! நான்தான். டாக்டர் சேகர்தான் பேசுகிறேன்...."
காட்சி - 17
இடம் :- தேவர் வீடு
இருப்போர் :- தேவர். ஜெகவீரர்
[தேவர் மேஜைமீது தலையைக் கவிழ்த்த வண்ணம் கவலையுடன் ஏதேதோ நினைத்துக் கொண்டிருக்கிறார்.]