பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓர் இரவு

49


[ஜெகவீரர், போதையுடன் அவரை விறைத்துப்
பார்ப்பதும், உலவுவதுமாக இருக்கிறார்.
டெலிபோன் மணி அடித்ததும் தேவர் பேசகிறார்!]

தே : என்ன சேகர்? இந்த நேரத்தில்.....

தே : ஓஹோ! சுசீலாவை அவசரமாக அழைத்துக் கொண்டு வரவே, பயந்துவிட்டாயா?....

தே : அதெல்லாம் ஒன்றுமில்லை...

[ஜெகவீரர் குறுக்கிட்டு]

ஜெ : யார் பேசுவது?

தே : சேகரன்.

ஜெ : சேகரனா? சரி! இங்கே வரச்சொல்லுங்கள்,

தே : யாரை?

ஜெ : அவனைத்தான். பயல், நாளைக்கு நிச்சயதார்த்தத்தின்போது ஏதாவது தொல்லை தரக்கூடும். வரவழைத்து...

தே : அவன் காலில் வீழ்ந்து.....

ஜெ : காலில் விழுவதோ, கண்ணீர் பொழிவதோ, எனக்குத் தெரியாது. நான் வெளியே போய் வருகிறேன். அதற்குள்....

தே : (டெலிபோனில்) டாக்டர்! ஆமாம்! கொஞ்சம் வந்து போகிறீரா... இல்லை...சுசீலா தூங்கிவிட்டாள். எனக்குக் கொஞ்சம் மார்வலி....

ஆமாம், சுசீலாவுக்குக்கூடத் தெரியக்கூடாது....பயந்துவிடும்.... உடனேதான்.....வருகிறீரா?....சந்தடி கூடாது......குழந்தை பயப்படும்.....