பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

அறிஞர் அண்ணா


காட்சி - 18

இடம் :- சேகர் வீடு.
இருப்போர் :- சேகர்.

[அவசரமாகக் கோட்டுப் போட்டுக்கொண்டு சில மருந்துகளையும் பெட்டியில் வைத்துக்கொண்டு புறப்படுகிறார்.]

காட்சி - 19

இடம் :- தேவர் வீடு.
இருப்போர் :- தேவர்.

[தேவர் சேகர் வரவுக்காகக் காத்திருக்கிறார். சேகர் அவசரமாக வருகிறார்.]

தே : சந்தடி செய்யாதீர், டாக்டர்! உட்காரும்.

[டாக்டர் சேகர், ஸ்டெதாஸ்கோப் எடுக்கிறார் - பரிசோதிக்கிறார்.]

தே : பார் சேகர்! எப்படி அடித்துக் கொள்கிறது பார்த்தாயா?

சே : ஆமாம்! கொஞ்சம் படுத்துக்கொள்கிறீரா? சரியாகப் பார்க்கவேண்டும்.

தே : பைத்யம்? சேகர், அதையெல்லாம் சுருட்டி வை பெட்டியில் உட்கார் இப்படி

சே : இதயக் கோளாறு என்றீரே...

தே : ஆமாம். நெடுநாளைய வியாதி. ஆனால் சுசீலா அதை சொஸ்தப்படுத்திவிட்டாள். உட்கார் சேகர்.

சே : மார்புகூட, படபட என்று அடித்ததே.

தே : நோயால் அல்ல. சேகர்! பேய் அறைந்து விட்டது என்னை. ஏன் அப்படி விறைத்துப் பார்க்கிறாய்? பேயாவது. பிசாசாவது. இதை எல்லாம் யார் நம்புவது என்கிறாயா? பேய், வேறோர் தனியான ஜாதி அல்ல அப்பா! மனிதர்களிலேயே சிலர் பேய்க்குணம் படைத்தவர்கள்தான்.

சே : தாங்கள் என்ன சொல்கிறீர்கள்?