பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓர் இரவு

53


தே : பிரமை! ஆமாம்!

(தனிமொழி) ஆனால்....குரல், அதே குரல்.....சொர்ணமா? இருக்க முடியுமா?

[எதிர்ப்புறமிருந்து சொர்ணம் ஓடிவருகிறாள். இருவரும். ஓடித் தழுவிக்கொள்கின்றனர். ஒருவரை
ஒருவர் பார்த்துக்கொள்கின்றனர்.]

தே : (அடிமூச்சுக் குரலில்) சொர்ணம்? நான்....

சொ : இன்பக் கனவல்ல! உண்மைதான்! நீங்கள் இங்கே எப்படி?

தே : மிட்டாதாரரிடம் ஒரு வேலையாக....நீ?

சொ : நானும் அவருடைய வேலையாள்தான்.....(தேவர் சொர்ணத்துடைய ஆடை அலங்காரங்களைப் பார்க்க) வேலை செய்பவளுக்கு. இப்படி அலங்காரம் இராதே என்று பார்க்கிறீரா? நான் மிட்டாதாரரின் அபிமான ஸ்திரி!

தே : அபிமான ஸ்திரி!

சொ : (தலையை ஆட்டி) ஆமாம்! மானம் இழந்த பிறகு அந்தப் பட்டம் தரப்படுகிறது, மாளிகையிலே குடி ஏறினால். பழைய மண் குடிசையாகவே இருந்தால், அபிமான ஸ்திரி என்ற பெயர் இராது. வேறு பலவிதமான பெயர். (பெருமூச்சு)

தே : (சொர்ணத்தை மறுபடி ஒரு கணம் ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு, ஆவேசம் கொண்டவர் போல)

சொர்ணம்!

சொ : இல்லை! சொர்ணம் செத்துவிட்டாள். உம்முடன் சோலையிலே விளையாடிய சொர்ணம் செத்துவிட்டாள். விதவை மாண்டுபோனாள். நான் ஸ்வர்ணா! மிட்டாதாரரின் வைப்பாட்டி.

கருணாகரத் தேவரின் மனைவியாக இருக்கவேண்டியவள் இன்று இந்த நிலையில்....