58
அறிஞர் அண்ணா
இதோ பார்! இல்லை! (முகவாய்க் கட்டையைப் பிடித்துக் கொண்டு) கொஞ்சம் சிரி! அந்தப் பழைய புன்னகை! அந்தக் காலத்துப் பிரேமையில் கொஞ்சநஞ்சம், மிச்ச மீதி, விட்ட குறை தொட்ட குறை!
[தேவரின் சோகத்தை நீக்க விளையாடுகிறாள் கொஞ்சிப் பேசியபடி. தேவர் ஆனந்தமடைகிறார்.]
சொ : ஆ ! முகத்திலே இப்போதுதானே சந்தோஷம் பிறந்தது.
இப்படிக் கொஞ்சிக் குலவ நான் சித்தமாக இருந்தேன். என் தேவன்தான் வரம் தரவில்லை. கண்களைத் துடைத்துக்கொள். இதோ முந்தானையால்....
[முந்தானையால் துடைக்கிறாள்]
மிட்டாதாரர், இந்தச் சேலையை நான் சுட்டிக் கொண்டதும் வெட்டிவேர் அத்தர் தெளிப்பார் இதிலே! இந்தக் கண்ணீருக்குள்ள மதிப்பு அந்த அத்தருக்கு ஏது? இனி உனக்கு நான், எனக்கு நீ! சரிதானா? மிட்டாதாரருக்கு மட்டும் தெரியக்கூடாது. அவர் கண்களிலே மட்டும் படக்கூடாது.
ஆனால் நீதான் ஆசைநாயகன். என் இன்பக் களஞ்சியம்.
[இந்தச் சாகசம் நடைபெறும் நேரத்தில் மிட்டாதாரர் தற்செயலாக அங்கே வந்துவிடுகிறார். கோபம் தலைக்கேறுகிறது. கைத்தடியால் ஓங்கி அடிக்கிறார் சொர்ணத்தின் முதுகில்.]
மி : நான் குருடனல்ல! குடிகெடுத்தவளே! உன் ஆசை நாயகனா இந்த நாய்? அடே! கருணாகரா, எவ்வளவு திமிர்! அடி காதகி!
[அவள் தலைமயிரைப் பிடித்துக் குலுக்கி அடிக்கிறார். தேவர் மயங்கிச் சாய்கிறார். சொர்ணத்தின் நகைகளை அறுக்கிறார்: ஒடிக்கிறார்.]
மி : மாலை! செயின்! வளையல்கள்! தொங்கட்டம்! துரோகி!