ஓர் இரவு
61
சொ : (பதைபதைத்து) ஈஸ்வரா! என்னை நீங்களுமா நிந்திக்கவேண்டும்? உங்களால் நான் இந்தக் கதியானேன்! நடுநிசியில் மாளிகையிலிருந்து விரட்டப்படுகிறேன். நான் அதைப்பற்றிக் கொஞ்சம்கூடப் பொருட்படுத்தவில்லை....
தே : ஏன் பொருட்படுத்தப் போகிறாய்? அவன் போனால் இவன் என்று தீர்மானித்து விட்டாய். அவ்வளவு தானே உனக்கு.
[சொர்ணம் தலையில் அடித்துக்கொண்டு]
சொ : தெய்வமே! தெய்வமே!
[தேவர் வேகமாகப் போகிறார்....
சொர்ணம் பின் தொடர்கிறாள்.]
சொ : என் கதி என்ன? ஐயோ! என்னைக் கைவிடாதீர். போகாதீர்.
தே : சொர்ணம் என் கோபத்தை அதிகப்படுத்தாதே. அழகான நிலவு! நீயோ எனக்குப் பால்ய சிநேகம்! மேலும் ஒருவனுடைய வைப்பாக இருப்பவள். அந்த நிலையில் ஏதோ உன்னிடம் சரசமாடும் சபலம் பிறந்தது. போராத வேளை, அவன் பார்த்துவிட்டான். அதற்கு நான் என்ன செய்வது? நானும்தான் அடிபட்டேன். நடக்கக்கூட முடியவில்லை.
சொ : என்னைக் காப்பாற்ற முடியாது! அவ்வளவு தானே.
தே : என் மனைவி யார் தெரியுமா?
சொ : தெரியும். அழகி. பார்த்திருக்கிறேன் பவானியை.
தே : அந்த ஜெமீன் வீட்டுப் பெண்ணை மணந்து கொண்ட நான். உன்னோடு குடித்தனம் செய்தால், உலகம் என்ன சொல்லும்? மேலும் உன்னோடு நான் குடித்தனம் செய்தால் மிட்டாதாரன் என்னைச் சும்மா விடமாட்டான்.
சொ : பயம், போலி கௌரவம்! பழைய வியாதிதான்!
தே : சொர்ணம்! நீ பெரிய வாயாடியாகிவிட்டாய் இப்போது.
சொ.: உங்களைப்போன்ற வஞ்சகர்கள் வதைத்ததால்! அன்பரே! என்னைக் கைவிடாதீர்! மயக்கமொழி பேசி என் மனதைக் கெடுத்து விட்டு. என்னை மண்ணில் புரளும்படி