பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

அறிஞர் அண்ணா


விட்டுவிட்டுப் போகாதீர் உமது மாளிகையிலே வேண்டாம். ஒரு மாட்டுக்கொட்டகையில் இடம் கொடும். என்னை மட்டும் ஏற்றுக்கொள்ளும். மேலும் மேலும் பழி தேடிக்கொள்ளாதீர். நான் நம்பி மோசம் போனேன். என்னை மேலும் நாசம் செய்யாதீர்.

[காலில் விழ. தேவர் அவளை உதறித் தள்ளி விட்டுப் போக, இந்தக் காட்சியைக் கொஞ்ச நேரமாக மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு தோட்ட வேலைக்காரன், பாய்ந்து சென்று தேவரின் கரத்தைப் பலமாகப் பிடித்து இழுத்து]

தோட் : மகா யோக்யண்டா நீ! ஒரு பெண்ணைக் கெடுத்துக் கீரை வழியாக்கிவிட்டு, குடும்பக் கௌரவம் குலப்பெருமை பேசிவிட்டு, நம்பி வந்தவனை நடுராத்திரியிலே நடுத் தெருவிலே விட்டுவிட்டுப் போகிறாயே? இதுதான் ஒரு ஆண் பிள்ளைக்கு அழகா?

தே : (எதிர்பாராத சம்பவத்தால் கொஞ்சம் அஞ்சி) அப்பா, நான் கலியாணமானவன். மேலும் ஜெமீன் குடும்பம்.

தோட் : கலியாணம் ஆன உனக்கு கண்ட கண்ட பெண்கள் மேல் ஏன் கண் விழுகிறது? பெரிய ஜெமீன் குடும்பமோ! இருந்தால் என்ன? ஜெமீன் தாரன்கூட மனுஷ ஜாதிதானே.....

தே : நீ யார் இவள் பொருட்டு என்னிடம் வம்பு செய்ய?

சொ : யாரோ பாவம், நெஞ்சிலே கொஞ்சம் ஈரமுள்ளவன்.

தோட் : (தேவரைப் பார்த்து) நான் ஒரு அன்னக்காவடி. நீ இலட்சாதிபதியாக இரு. அதனாலே, என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாமா? சொல்லு நீயே.

தே : அப்பா! என் நிலைமை அப்படிப்பட்டது. என்னால் இவள் கஷ்டப்பட்டதால், நான் வேண்டுமானால், ஆயிரம் இரண்டாயிரம் பணம் கொடுத்துவிடுகிறேன்....

தோட் : (கேலியாக சொர்ணத்தை நோக்கி) இன்னம் என்னம்மா குறை! பணம் கொடுக்கிறாராம் பணம்! பணம் ஒன்று தவிர வேறே என்ன இருக்கிறது இவனிடம், கொடுப்பதற்கு?