ஓர் இரவு
63
[தேவரைப் பார்த்து]
ஏ! நீ யாராகவேனும் இரு. என் கண்ணாலே இந்தப் பெண்ணின் கஷடத்தைப் பார்த்தான பிறகு, இதுக்கு ஒரு நல்ல கதி காட்டாத முன்பு, உன்னை நான் விடப் போவதில்லை.
சொ : (தோட்டக்காரனைப் பார்த்து) அப்பா! உனக்குக் கோடி புண்யம். இந்தப் பாவியால் நான் விபசாரியானேன்- கொஞ்ச நேரத்துக்கு முன்பு பஞ்சணையில் இருந்தேன் - அங்கு வந்து கெடுத்ததும் இந்தப் பாதகன்தான். நீ யாரோ. பாவம். நீ காட்டும் இரக்கத்திலே ஆயிரத்திலே ஒரு பங்கு கூட இவனிடம் இல்லை.
தோ : (கேலியும் சோகமும் நிறைந்த குரலில்) எப்படியம்மா இருக்கும்! அதான் நிறையப் பணம் இருக்கு என்கிறானே! இரும்புப் பெட்டிக்கும் இருதயத்துக்கும் ஈஸ்வரன் சம்பந்தம் வைக்கிறது இல்லை அம்மா
சொ : அப்பா! நீ குல தெய்வம் போலக் குறுக்கிட்டாய். நான் இனிக் கூலி வேலை செய்தாவது பிழைக்கிறேன். எனக்காகப் பரிந்து பேச உலகிலே ஒருவராவது முன் வந்தார்களே, அதுவே போதும். இவன் ஒழியட்டும். விட்டுவிடு.
தோட் : அடடே! அது நடக்கிற காரியமா? பெரிய ஜெமீன் வீடு என்றாரே, அந்த இடத்து யோக்யதை, இலட்சணம், ஊராருக்குக் கொஞ்சம் தெரியணுமில்லே! நம்ம வீட்டுக்கு வாங்க. ஐயாவும் வருவாரு. இருந்து யோசனை செய்து பார்க்கட்டும்.
தே : நான் வர முடியாது.
தோ : ஏன் ! நடக்க முடியலையோ? ஐயாவைத் தூக்கிகிட்டுப் போகணும் போலிருக்கு. வாங்கய்யா, வாங்க.' ஏழைக முதுகிலே ஏறிச் சவாரி செய்து செய்து, பரம்பரைப் பரம்பரையாப் பழக்கப்பட்டுப் போ சி! ஆனா இப்போ. குதிரைகளெல்லாம் கொஞ்சம் இடக்கு செய்யுது. ஜாக்கிரதையா இருக்கணும். நட, நட, வகையாத்தான் வந்து