பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓர் இரவு

65


(சொர்ணத்தைப் பார்த்து) இந்த ஐயாமாருக குணமெல்லாம் நமக்கு ரொம்பப் பழக்கம்.

[தேவர் வலியால் கூச்சலிடுகிறார்]

தே : ஐயோ! அம்மா!

தோ : ஏன்? என்னா? ஏன் ஐயாவையும் அம்மாவையும் கூப்பிடறே?

தே : (கஷ்டத்துடன்) மாரெல்லாம் வலிக்குது. மயக்கமா இருக்குது! மூச்சு என்னமோ திணறுது.

[துடிக்கிறார்]

தோ : நெஜமா? பாசாங்கா?

[தேவர் துடிக்கக் கண்டு, தோட்டக்காரன் உள்ளே போய் ஒரு கயிற்றுக் கட்டிலைத் தூக்கிவந்து போட்டு அதன்மேல் ஒரு விரிப்பும் போட்டு]

இதுமேலே படுத்துக்கொள். என்னடா இது தர்மசங்கடமா போக்சு!

(சொர்ணத்தைப் பார்த்து) ஏம்மா! உள்ளே போயிக் கொஞ்சம் வெந்நீர் போட்டு ஒத்தடம் கொடு.நான் போயி. பக்கத்திலே ஒரு வைத்யரு இருக்காரு, அவரை அழைச்சிக்கிட்டு வாரேன்.

உள்ளே போயி அடுப்பு மூட்டும்மா, யாருமில்லை, நானு ஒண்டி கட்டே. போயி வைத்யரை அழைச்சிக்கிட்டு வர்ரேன். அந்தப் பாவி எங்கே குடிச்சிப்போட்டு ஆடிகிட்டு இருக்கிறானோ?

[போகிறான்]

காட்சி - 23

இடம் :- வைத்தியர் வீடு.
இருப்போர் :- வைத்தியர். அவர் மனைவி.

[வைத்தியர் இருமல் நோயால் கஷ்டப்படுகிறார். அவர் மனைவி பக்கத்தில் இருந்து கொண்டு பேசுகிறாள்.]