பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

அறிஞர் அண்ணா


ம : இருமி இருமி, அண்டை பக்கத்தைக்கூடத் தூங்க விடாதிங்க. பாழாப்போன சாராயத்தைக் குடிச்சிப் போட்டுத்தான் குடலே வெந்து கிடக்குதே.

வை : சீ! கழுதேமுண்டே.

ம : அட உன் மண்டையிலே ஏதாச்சும் மூளை கீளை இருக்குதா? கல்லாட்டமா பக்கத்திலே புருஷன்னு உட்கார்ந்துகிட்டு, என்னைப் போயி முண்டேன்னு சொல்லறயே? உன் புத்தியிருக்கிற லட்சணத்தைப் பாரு.

[உள்ளே வரும் தோட்டக்காரனைப் பார்த்து]

வை : யாரு?

தோ : நான்தான், வேலன்.

வை : ஏம்பா! என்னா சமாசாரம்? (இருமுகிறார்.)

தோ : ரொம்ப இருமறீங்களே! காய்ச்சலோ?

வை : அதெல்லாம் இல்லைபோ! காச்சல் கீச்சல் வந்தா நம்மகிட்ட என்ன, மருந்துக்கா பஞ்சம்! தண்ணி சாப்பிட்டேன். புறை ஏறிப்போச்சி. (இருமுகிறார்) தண்ணி சாப்பிடுகிற போது இவ என்னமோ பேசிச் சிரிப்புக் காட்டிவிட்டா (இருமுகிறார்) அது கடக்குது கழுதே! ஒரே பொட்டலத்திலே ஓடிப்போகும். நீ என்னா வேலையா வந்தே?

தோ : நம்ம மச்சான், வீட்டிலே வந்திருக்கிறாரு; மார்வலின்னு துடிக்கிறாரு.

வை : (எழுந்து தலையிலே பாகையை வைத்துக்கொண்டு, புறப்படுகிறார்)

அது கடக்குது கழுதே! ஒருவேளை கஷாயத்திலேயே ஓடிப்போகும் வா!

[இருவரும் கிளம்புகின்றனர்]

காட்சி - 24

இடம் : தோட்டக்காரன் வீடு.
இருப்போர் : தேவர், சொர்ணம். வைத்தியர், தோட்டக்காரன்.