பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓர் இரவு

67


[வைத்தியர் வருகிறபோது தேவருக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருக்கிறாள்சொர்ணம்.

வைத்தியர் கை பார்த்துவிட்டு, உடம்பிலே பல இடங்களிலே அடிபட்டிருப்பதையும் பார்த்துவிட்டு, தோட்டக்காரனைப் பார்த்துக் கூறுகிறார்]

வை : ஏம்பா! சமாசாரம் வேறேயா இல்ல இருக்கு. மார்வலி நோவாலே ஏற்பட்டதில்லை. ஆசாமியை எங்கேயோ சரியாக் குமிறிப்பூட்டாங்கப்போல இருக்கே.

தோ : அப்படின்னா?

வை : அட, எங்கேயோ அடிஅடின்னு அடிச்சிருக்காங்க. மேல் காயத்தைவிட உள் காயம் அதிகம். கவனிக்காமே விட்டுவிட்டா உள்காயம் ரொம்ப ஆபத்தாச்சே.

தோ : சரி. அதுக்கு என்னா செய்யணுமோ செய்யுங்க.

வை : கைகால் பிசகி இருக்குமோ?

[தேவரின் கைகாலை நீட்டியும் மடக்கியும் பார்க்கிறார். தேவர் வலி தாளாது கூச்சலிடுகிறார்]

நினைச்சாப்போலத்தான் இருக்கு. கால்பூட்டு கொஞ்சம் விலகி இருக்கு.

தோ : ஆமாம்! நடக்கக்கூட முடியாதுன்னு சொன்னான்.

சொ : நொண்டி நொண்டித்தான் நடந்தாரு.

வை : அது கடக்குது கழுதே! மூணு நாள் பச்சிலைக் கட்டிலே...! பறந்து போவுது போ.

சொ : மூணு நாளாவுமா?

வை : அட, இன்னக்கி ஜுரம் வந்துடுச்சேல்லோ?

[சொர்ணம் தேவரைத் தொட்டுப் பார்த்து]

சொ : ஆமாம், நெருப்பாட்டம் இருக்கே!

[வைத்தியரும் தொட்டுப் பார்த்து]

வை - ஜுரந்தான்! அலட்டுமேலே வந்த ஜுரம். அது கடக்குது கழுதே! அதுக்கு ஒரு மாத்திரை தரேன், சொல்லாமே ஓடிப் போவும். அப்பாலே மூணு நாலு நாள்