68
அறிஞர் அண்ணா
பச்சிலை கட்டினா, ஆளு பழையபடி நடக்கலாம். வாப்பேன்; மாத்திரையும், கொஞ்சம் தைலமும் தர்ரேன்.
[போக எழுந்திருக்கிறார்]
சொ : மேல் காயத்துக்குக்கூட.....
வை : அனுப்பறேன். உம்! நம்மகிட்ட இருக்கற பஸ்பத்துக்கும் மாத்திரைக்கும் தைலத்துக்கும், நாம்பளும் கொஞ்சம் வெள்ளைக்காரன் பாஷையைப் படிச்சிக்கிட்டு, கோட்டுகீட்டு மாட்டிகிட்டா, பெரிய டாக்டருதான்! இப்ப யாருக்குத் தெரியுது தமிழ் வைத்யருடைய பெருமை? தமிழ் வைத்யம்னா கிள்ளுக்கீரையா நினைக்கிறாங்க. (இருவரும் போகின்றனர்.)
[அவர்கள் போனபிறகு சொர்ணம், தேவரைக் குலுக்கி எழுப்பி]
சொ : இதோ பாருங்கோ! ஏன் இப்படி வேஷம் போடறிங்க.
தே : (களைப்புடன்) ஐயோ! வேஷமில்லையே! அப்பரி! அம்மா!
சொ : நிஜமோ, பாசாங்கோ தெரியலை; வேணுமானா எழுந்து போய்விடுங்க அவன் வருவதற்குள்ளே! நான் எக்கேடோ கெட்டுப் போகிறேன்.
தே : ஐயோ! என்னாலே முடியாதே....அம்மா!
[மயக்கமடைகிறார்]
சொ : பாவம்! நிஜமாகவேதான் ஜுரம். பொழுது விடியட்டும் பார்ப்போம்.
[தேவரை எழுப்பி உட்காரச்சொல்லி கொஞ்சம் வெந்நீர் சாப்பிடச் சொல்கிறாள்.]
கொஞ்சம் வெந்நீர் குடியுங்க, நெஞ்சு உலர்ந்துபோகுமே.
[தேவரால் உட்கார்ந்திருக்க முடியவில்லை. வெந்நீர் குடிக்கப் பாத்திரத்தை எடுக்கும் போதுக் கை உதறுகிறது. சொர்ணம், தேவர் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு, வெந்நீரைக் குடிப்பாட்டுகிறாள். பாதியிலே பாத்திரம் அவள் மீது வீழ்ந்து,