பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓர் இரவு

69


சேலை நனைந்து விடுகிறது. தேவர் அதற்குள் மயக்கமடைகிறார்; அப்படியே சொர்ணத்தின் மேல் சாய்கிறார். மெள்ள அவரைப் படுக்க வைத்துவிட்டு உடம்பின் மேலே ஒரு போர்வையை மூடுகிறாள். தலைவலி என்று ஜாடை காட்டுகிறார் தேவர். சொர்ணம் தலைமாட்டுப்பக்கம் அமர்ந்து தலையை அமுக்குகிறாள். தோட்டக்காரன் வருகிறான்.மருந்தைக் கொடுக்கிறான்]

தோ : ஏம்மா! இதோ பாரு. மருந்து கொடு. கதவைத் தாள் போட்டுகிட்டு படுத்துக்கோ. காலையிலே எழுந்ததும், கஞ்சி போட்டுக்கோ. நீயும் சமைச்சிச் சாப்பிடு. சாமானெல்லாம் இருக்கு.

சொ : ஏண்ணா! எங்கே போறிங்க இந்நேரத்திலே?

தோ : நேரம்னு ஒண்ணு இருக்கா நமக்கெல்லாம். நான் இங்கே ஒரு பெரிய வியாபாரி வீட்டிலே வேலைக்கு இருக்கறேன். வீடா அது, அரமனைதான். அங்கே எப்பவும் வேலை இருக்கும். என் சம்சாரம் போன வருஷம் அம்மைவந்து போயிடுச்சி. நான் ஒண்டிக்கட்டே அதாலே, இங்கே ஒரு வேளை, அரமனையிலே ஒரு வேளை, இப்படிச் சமயம்போலச் சாப்பாடு நடந்துவிடும்.

சொ : பெரிய பணக்காரர் வீட்டிலே வேலையா உனக்கு?

தோ : இல்லாவிட்டா இவங்க கொணாதிசயமெல்லாம் எப்படித் தெரியும் நமக்கு.

சொ : காலையிலே வந்துவிடுவயா?

தோ : வாரேன். ஆனா நாளைக்கு என்னமோ விசேஷமாம் அரமனையிலே. அதாலே அங்கேயே இருந்துட்டாலும் இருந்துவிடுவேன். உனக்கென்ன பயமா?

சொ : அதெல்லாம் இல்லே, நீ அங்கேயே இருக்க வேணும்னா நான் வேணும்னா சாப்பாடு எடுத்துக்கிட்டு வாரேன். இடத்தைச் சொன்னர்.

தோ : பைத்யக்காரப் புள்ளெமா நீ! அரமனையிலே தான் நாளைக்கு விருந்தாச்சே. விசேஷம்னா என்னா, விருந்து