பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

அறிஞர் அண்ணா


தானே! சாப்பாடு அங்கேயே கிடைக்கும். நீ படுத்துக்கோம்மா. நான் போயி வாரேன்.

[போகிறான்.]

காட்சி - 25

இடம் : பாதை.
பாத்திரம் :- தோட்டக்காரன்.

[தோட்டக்காரன் போகிறான். மெள்ள ஒரு கிராமியப்பாட்டுப் பாடிக்கொண்டு]

காட்சி - 26

இடம் :- மாளிகைத் தோட்டம்.
பாத்:- தோட்டக்காரன்.

[பாடிக்கொண்டே உள்ளே நுழைந்து, ஒரு மரத்தடியில் படுக்கிறான்........தூக்கம்.]

காட்சி - 27

இடம் :- மாளிகை உட்புறம்.
பாத் :- சீமான் செட்டியார், வேலையாள். நண்பர்கள்,
(பிறகு) குத்தகைக்கார கோவிந்தன்.

[சீமான் சிங்காரித்துக் கொண்டிருக்கிறார். நண்பரும் வேலையாளும் ஓடி ஆடி வேலை செய்கிறார்கள்.]

சீ : (நண்பனைப் பார்த்து) ஆமாம்! கச்சேரி, நன்றாக இருக்குமா?

நண் : அருமையாக இருக்கும்: விலாசனி பாட்டிலே இருக்கும் விசேஷம் என்ன தெரியுமோ? மற்றவர்கள் பாடுவார்கள், அவ்வளவோடு சரி; இவ பாடும்போது, அந்த முகபாவம் இருக்கு பாருங்கோ,

"முருக ளென்றதுமே-எனக்கோர்
மோகம் பிறக்குதம்மா!"