பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

அறிஞர் அண்ணா


[வேலையாள் போய்க் கோவிந்தனை வரச் சொல்கிறான்.]

[கோவிந்தன் ஒருபுறமாக வந்து நிற்கிறான்- இடுப்பின்மேல் வேட்டியைக் கட்டிக் கொண்டு. சீமான், அவனைக் கவனிக்காமல் தன் அலங்கார வேலையிலேயே இருக்கிறார்.]

சீ : (நண்பனைப் பார்த்து) எப்படி இருக்கு?

[கோவிந்தன். தன்னிடம்தான் சீமான் பேசுகிறார் என்று எண்ணிக் கொண்டு]

கோ : பயிருங்களா?

சீ : (கோபத்துடன் குத்தகைக்காரனைப் பார்த்து) உன்னையாடா இப்போ பேசச் சொன்னது? பயிரு கதை பேச வந்து விட்டாயோ, மகா யோக்யன்போல்.

[நண்பனைப் பார்த்து; தன் கரத்தைக் காட்டி]

எப்படி இருக்கு இந்த ரிஸ்ட் வாட்ச்?

ந : பேஷா இருக்கு. ஆனா ஆலந்தூர் நாயுடு.....

சீ : அவனிடம் இருக்கற ரிஸ்ட் வாச், ரொம்ப அம்பக்கய்யா. இரண்டும் ஓரே மேக்தான். ஆனா கம்பெனியிலே. கொஞ்சம் கெட்டுப்போனதை அவனிடம் தள்ளிவிட்டு, முதல்தரமானதை நம்மிடம் கொடுத்தார்கள். விலை என்ன சாமான்யமா? 500 ரூபாய்.

[காதிலே வைத்துப் பார்க்கிறார். ஆட்டிவிட்டு மறுபடியும் பார்க்கிறார்.]

ந : ஏன் ஓடலியா?

சீ : ஓடுதே! (மறுபடி பார்த்து) சாவி கொடுக்கலையா? ஓடுதே! டேய்! ஓடிப்போய் அம்மாவைக் கேள், சாவி கொடுத்தாங்களா இல்லையான்னு.

வே : சின்ன அம்மாவையா, பெரிய அம்மாவையா?

சீ : பெரிய அம்மாதானே சாவி கொடுக்கற வழக்கும். கொடுத்தாங்களான்னு சின்ன அம்மாவைப் போய்க் கேள்.