ஓர் இரவு
73
[கோவிந்தனைப் பார்த்து]
சரி! கோவிந்தா. என்ன சேதி. சொல்லி அழு.
கோ : அதாங்க, வயல் வறண்டு போச்சிங்க. இந்த வருஷம் ஏதாச்சும் தள்ளிக் கொடுத்தாத்தான் நான் தலை தூக்க முடியும்......
சீ : நீ பெரிய அயோக்யன்னு எனக்குத் தெரியுமே! பஞ்சப் பாட்டு பாடவந்துட்டயோ. வயல் காஞ்சா எனக்கென்ன? விளைஞ்சா எனக்கென்ன.
[நண்பனைப் பார்த்து]
கேளய்யா, அவன் சொல்ற கதையே. வயறு எரியுது! பய எப்பவும் இதே சேதி தான். ஒரு நாளாவது நிம்மதியான பேச்சுக் கிடையாது.
ந : (கோவிந்தனைப் பார்த்து) ஏம்பா, அவரைக் கஷ்டப்படுத்தறே?
கோ : (நண்பனைப் பார்த்து) என்னாங்க, நீங்கதான் சொல்லுங்களேன். மழை அடியோடு ஏறக்கட்டிடுத்தே, நான் என்னாச் செய்யறதுங்க.
ந : ஆமாம்! மழை தான் இல்லாமே போச்சு.
சீ : மழை இல்லாவிட்டா என்னா? கிணறு எங்கே போச்சு? காலா காலத்திலே வயலுக்குச் செய்யவேண்டிய வேலையைச் செய்யவேணாம்னு யாரப்பா இவன் கையைப் பிடிச்சிக்கிட்டாங்க.
கோவிந்தா! இதோ பாரு! ஒரு ரூபா கூடத் தள்ளிக் கொடுக்க முடியாது. நமக்கு இந்த வருஷம் செலவுமேலே செலவு. இருக்கறதைக் கொடுத்துவிட்டு. மிச்சத்துக்கு ஒரு அண்டிமாண்டு எழுதிக் கொடுத்துவிட்டுப் போ.
[கோவிந்தன் நிற்கிறான் சீமான், போகும்படி கைகாட்டுகிறார் அலட்சியமாக அவன் போய்விடுகிறான்]
நீ : நிலம் வைச்சிக்கிட்டு இருக்கிறதுன்னாலே இப்படித் தானுங்க தொல்லை.
சீ : ஆமாம்! அதெல்லாம், அவனுங்க. கையைப் பிசைவான்க, கண்ணைக் கசக்குவானுக, கொஞ்சம்