பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓர் இரவு

75


காட்சி - 28

இடம்:- தோட்டக்காரன் வீடு.
இருப்போர்:- தேவர், சொர்ணம், தோட்டக்காரன்.

[தேவர் கொஞ்சம் தெளிவுடன் இருக்கிறார். சொர்ணம் வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறாள். தோட்டக்காரன் ஒரு பொட்டலத்துடன் வந்து சேருகிறான், சொர்ணத்திடம் பொட்டலத்தைக் கொடுத்து]

தோ : சாப்பிடம்மா! சாப்பிடு! அரமனை பலகாரம் அருமையா இருக்கும்.

[சொர்ணம் பொட்டலத்தைப் பிரித்து, பலகாரத்தைத் தோட்டக்காரனுக்குத் தர, அவன் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே]

நான் அங்கேயே சாப்பிட்டுவிட்டுத்தான் வந்தேன். நீ சாப்பிடு. இதெல்லாம் நமக்கு எப்போதுமா கிடைக்கும்? சாப்பிடு.

சொ : அரமனையிலே, விருந்து பலமா?

தோ : பலத்துக்கு என்ன குறைவு? எங்க எஜமானரு இந்த வருஷம் கலர் வியாபாரத்திலே மட்டும் ஆறு லட்சம் அடிச்சாரு லாபம்.

சொ : அம்மாடி!.ஆறு லட்சமா?

தோ : ஆமாம்! ஆனை வாகன உற்சவம். இந்த வருஷம் அவருதானே நடத்தினாரு. ஐஞ்சி ரூவா வர்ணப்பெட்டி எழுவது ரூபாய்க்கு வித்தாரில்லே, ரொம்ப சாமர்த்தியக்காரரு.

சொ : அப்படியா?

தோ : இவரு சொல்றாரே!

[தேவரைக் காட்டி]

யாராரோ ஜெமீன் தாருங்கன்னு. அவங்க எல்லாம், நம்ம எஜமானரு கிட்ட ஒண்ணும் செய்திக்க முடியாது. ஆமா! ரொம்பப் பேரு அவருகிட்ட கடன் வாங்கினவங்கதான்