பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

அறிஞர் அண்ணா


இப்ப, அரமனையிலே ஒரு ஜெமீன்தாரன் தான் கடக்கறான். பாட்டுக் கச்சேரிக்குக்கூட ஒருத்தியைக் கூடவே கூட்டிக்கிட்டு வந்திருக்கிறான்.

சொ : யாரு அவ?

தோ : ரொம்ப ஒழுங்காகத்தான் இருக்கறா, ஆனா, எங்க எஜமானரு இருக்காரே, அவர் பக்கா, இந்தமாதிரி விஷயத்திலே. வந்திருக்கிறவளும், ரொம்ப வெட்கப்படுகிற மாதிரியும் காட்டிக்கறா, ஆனா அவதான் எஜமானருக்குக் காப்பி ஊத்திக் கொடுக்கறா!

சொ : அம்மா! ரொம்பக் கெட்டிக்காரிதான் போலிருக்கு.

தோ : அவரு, அதைக் காப்பின்னு நினைச்சா குடிச்சாரு! என்னமோ கதையிலே சொல்வாங்களே தேவாம்ருதம்னு. அதுன்னு நினைச்சிக்கிட்டுக் குடிச்சாரு.

அது கிடக்குது, (தேவரைக்காட்டி) ஐயா என்னா சொன்னாரு?

சொ : ஜுரம் இல்லை இப்போ.

தோ : அட அதெ இல்லைம்மா! உன் விஷயமாக என்ன சொன்னாரு?

சொ : நான் அந்த எண்ணத்தையே விட்டுவிட்டேனே! அவரு உடம்பு சொஸ்தமானதும், மகராஜனாகப் போகட்டும் வீட்டுக்கு. நான், இங்கேயே இருந்து உனக்கு சமைச்சிப் போட்டுகிட்டு இருக்கிறேன்.

தோ : என்னம்மா இது! உனக்குக் குழந்தை குட்டி....

சொ : (கண்களைத் துடைத்துக் கொண்டு) ஒரே ஒரு மகன். எல்லாம் இவராட்டமே தான் இருப்பான்.

தோ : எங்கே இருக்கிறான்?

சொ : ரெபர்மடரி ஸ்கூலிலே.

[தேவர் திடுக்கிடுகிறார்]

தோ : அப்படின்னா என்னா?

சொ : சிறு பிள்ளைக திருடினா, அதுகளைப் பிடிச்சி. மூணு வருஷம் ஐஞ்சு வருஷம்னு தண்டிச்சு, ஒரு பள்ளிக்கூடத்திலே