பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓர் இரவு

77


மடக்கிப் போட்டு வைப்பாங்க. ரத்னம், அந்தப் பள்ளிக்கூடத்திலேதான் இருக்கிறான்.

[தேவர் முகத்தைக் கைகளால் மூடிக்கொள்கிறார்.]

தோ : அவங்க அப்பன் ஜெமீன் வீடு, அவன் ஜெயிலிலே. ஒழுங்காத்தான் இருக்குது. சரிம்மா நான் போயிட்டு வாரேன். அங்கே பாட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருக்கும்.

சொ : ஏண்ணா! சமயல் செய்தாச்சி! இவருக்கும் கஞ்சி கொடுத்தாச்சி. எனக்கு பாட்டு கேட்கறதுன்னா ரொம்பப் பிரியம். நானும் வரட்டுமா?

தோ : வாயேன்! தோட்டத்துப் பக்கமா இருந்து பார்க்கலாம் வா.

[இருவரும் போகின்றனர்]

காட்சி - 29

இடம்:- சீமான் மாளிகை.
இருப்போர்:- ஜெகவீரன், விலாசனி, சீமான், நண்பர்
இருவர்.

[விலாசனி பாடுகிறாள். நண்பர்கள் தாம்பூலம் போட்டுக் கொள்ளுகின்றனர். ஜெகவீரன், சிகரெட் பிடிக்கிறான். சீமான், ஆனந்த பரவசமாகி இருக்கிறார். பாட்டு முடிகிறது. விலாசனி முகத்தில் ஒழுகும் வியர்வையைத் துடைத்துக் கொள்கிறாள்.]

காட்சி - 30

இடம்:- சீமான் மாளிகைத் தோட்டம்.
இருப்போர்:- தோட்டக்காரன், சொர்ணம்.

[சொர்ணம். ஒரு ஜன்னல் வழியாகப் பார்க்கிறாள், கச்சேரி செய்பவளை திகைத்துப் போய், தோட்டக்காரனை அழைத்து.]

சொ : பாடுகிறவ பேர் என்ன சொன்னார்கள்?

தோ : என்னமோ விலாசனியாம்.

சொ : கூட இருக்கிறவரு?