ஓர் இரவு
81
[சீமானைப் பார்த்து கண் ஜாடை காட்டுகிறான். ஜெகவீரன்.]
சீ : ஆஹா! அழைத்துக்கொண்டு போய்க் காட்டு, நமது தோட்டம் நாலு ஏகர் விஸ்தீரணம்.
[ஜெகவீரன் காமிராவைக் காட்டி]
நமக்கு இயற்கைக் காட்சிகளைப் படம் பிடிப்பது என்றால் ரொம்பப் பிரியம்.
[விலாசனியும் ஜெகவீரனும் போகின்றனர்.]
காட்சி - 33
இடம் :- சீமான் மாளிகைத் தோட்டம்.
இருப்போர் :- ஜெகவீரன், விலாசனி.
[தோட்டத்தில் ஒரு மரத்தடியில் விலாசனி சோகமாக நிற்கிறாள்.]
ஜெ : விலாசனி!
வி : இன்னமுமா விலாசனி! என்னை விலாசனி என்று கூப்பிடும்போது எனக்கு எவ்வளவு வேதனை உண்டாகிறது தெரியுமா?
ஜெ : இன்னம் இரண்டு மணி நேரம்; பிறகு விலாசனி மறைவாள். இரு! நான் சில காட்சிகளைப் படம் பிடித்துக்கொண்டு வருகிறேன்.
[ஜெகவீரன் போகிறான். வேறோர் பக்கமிருந்து சொர்ணம், தேவரை இழுத்துக் கொண்டு வருகிறாள். தொலைவிலே விலாசனியைக் கண்டதும் பதைபதைத்து]
தே : ஆ! பவானி! நீயா - என்ன இது மூக்குக் கண்ணாடி. மாறு வேஷம்?
[எதிர்பாராதவிதமாகத் தேவரைக் கண்ட பவானி அலறி]
u : ஐயோ மோசம் போனேன்.