ஓர் இரவு
89
கோன்னு இருக்கிறேன், இனி மருந்து வேலை செய்யாது. மனவியாதி அல்லவாடா என்னைக் கொல்லுது. அதுக்கு யாரிடமும் மருந்து கிடையாதுடாப்பா.
[ரத்னத்தைப் பின்தொடர்ந்த சேகர், அங்கே நுழைந்து மறைந்துகொண்டு நிலைமையைக் கவனிக்கிறான்.]
ர : பயப்படாதேம்மா! பணம் நிறையக் கொடுத்தா இந்தக் காலத்திலே பிணத்தைக்கூட எழுப்பிவிடுகிற டாக்டருங்க இருக்காங்க. உனக்கு என்னம்மா? பிழைச்சிக்கொள்வே. பணம் தேடிப் போனேன். பலிக்கலை.
சொ : பணத்துக்கு எங்கே போனாயப்பா இந்நேரத்திலே?
ர : எங்கேயம்மா போவேன்? வாடகை ப்பாக்கிப் பணம் கேட்கப் போவேனா. வட்டிப்பணம் கேட்கப் போவேனா? திருடத்தான் போனேன்.
சொ : வேண்டாம்பா இன்னம் அந்தத் தொழில்.
ர : இன்னக்கித்தான் கடைசீ. அம்மா! போன இடத்திலே ஒரு வேடிக்கை!
சொ : என்னாடாப்பா வேடிக்கை?
[எழுந்து உட்காருகிறாள், கட்டிலின் மீது.]
ர : படுத்துக்கிட்டே கேளம்மா, உன்னாலே உட்கார முடியாதே.
சொ : பரவாயில்லைடா ரத்னம், சொல்லு. தண்ணி குடிச்சதும் கொஞ்சம் உசிரு வந்துது.
ர : ஒரு பெண் இருந்த அறைக்குள்ளே நுழைந்து விட்டேன். அவளுக்கு என்னமோ பெரிய வேதனையாம். யாரோ அவ மாமனாம், ஒரு ஜெமீன்தாரன், அவளைக் கலியாணம் செய்து கொள்ளணும்னு வற்புறுத்தினாங்களாம்.
(இடையே) ஏம்மா! படுத்துக்கொள்ளேன்! காலை அமுக்கறேன்.
சொ : வேண்டாம்பா! நீ சொல்லு, அப்புறம்?
ர : அந்தப் பெண்ணுக்குத் துளிகூட இஷ்டமில்லை, அவனைத் கலியாணம் செய்துகொள்ள. நல்ல அழகும்மா பொண்ணு பாவம் உயிர்மேலேயே வெறுப்பாப்போச்சு அந்தப் பெண்ணுக்கு. விஷத்தைக் குடிச்சுச் செத்துப் போறதுன்னு தயாராகிவிட்டா
சொ : அட பாவமே!
சொ : நான் ஒரு இரண்டு நிமிஷம் கழிச்சி போயிருந்தேன். பெண்ணு மண்ணுதான்.