பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓர் இரவு

95


இருக்கிறது, தேவர் கொலை செய்தவர் என்று ருஜு காட்ட. அதனைக் கைப்பற்றி விடவேண்டும்.

ர : புறப்படு.

சே : எங்கே கண்டு தேடுவது அவனை?

ர : பெரிய குடிகாரனாயிற்றே.........

சே : எங்காவது ஆடிக்கொண்டு கிடப்பான்.

ர : அப்படியானால் வா சேகர்! இங்கே ஒரு சூதாடுமிடம் இருக்கிறது. குடி, கூத்தி சகலமும். போய்ப் பார்ப்போம்.

[போகின்றனர்]


காட்சி -41

இடம் :- சூதாடும் இடம்.
இருப்போர் :- பலர்.

[சூதாடும் இடத்தில் குடிவெறியுடன் பலர். சிலர் சீட்டாடுகின்றனர், சில பெண்களும் இருக்கின்றனர். கலகமும் கூச்சலும் இடையிடையே. பெண்கள் சிரிப்பு.]

ஒரு குடியன் : (ஒரு பெண்ணைப் பார்த்து) ஷோக்கா ஒரு பாட்டுப் பாடுடீ! கேட்டுக்கிட்டே ஆடலாம்.

மற்றோர் குடி : செ! வேண்டாண்டா! அவ பாடினா, சீட்டாட்டத்து மேலே புத்திபோவாது.

முதல் குடி : பாடுடி, பாடுடின்னா பாடணும்.

[பாட ஆரம்பிக்கிறாள்]

மற்ற குடி : ஏ! நிறுத்துடி, பாடக்கூடாது.

முதல் குடி : பாடு.

மற்ற குடி : பாடாதே!

முதல் குடி : நீ யாருடா தடுக்க?

[என்று கேட்டுக்கொண்டே திரும்பிப் பார்க்க, சேகரும் ரத்னமும் வரக்கண்டு]

டே! யாருடா நீ?

ஏ : நாங்களா? ஏன் சொல்ல வேணுமா?

மற்றக் குடியன் : யாரோ புதிசு! வாங்க பிரதர்! வாங்க! என்னா பிரதர். கோவிக்கறே.

[ரத்தினத்தின் முகவாய்க்கட்டையைத்தொட அவன். அவனுடைய கையைப் பிடித்துத் தள்ளுகிறான்.]

ர- சும்மா, இப்படித் தமாஷா! பொழுது போக்க.....