பக்கம்:ஓர் விருந்து அல்லது சபாபதி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

சபாபதி

(Takes out his pocket book and writes a memo). “Please send per bearer a box of Ammonia in my account.” அடே, எதிர் ஷாப்லே போய் வாங்கியாடா இதே. ஜாக்கிரதையா தூக்கிக்கினு வா.

(சபாபதி போகிறான்.)

இந்த வாத்தியப்பெட்டி வர்ரவரைக்கும் சும்மா பாடிகினு இருப்போம். (பாட ஆரம்பிக்கிறார்) அங்கிங்கெனாதபடி-

சபாபதி மறுபடியும் வருகிறான்.

ச.
(Brings a bottle of Ammonia)ஏம்ப்பா நீ என்னாப்பா எழுதனே? நான் அமோனியாப் பெட்டி கேட்டாக்கா, இத்தே கொடுத்தாம்பா அந்த கழுத மகன்!
S. M.
என்னாடா! இந்த மருந்தே வாங்கி யாந்தயே!
ச.
இதாம் எழுதினாரு இண்ணு சொன்னான். இல்லை ஐயா, வாத்தியப் பெட்டி ஓணும்னு சொன்னே. போடா, உனக்கு ஒண்ணும் தெரியாது இண்ணு என்னை கல்தா கொடுத்தனுப்பிச்சான்.
S. M.
போனாப்போவுது. இது வாணாம்னு சொல்லி திருப்பி கொடுத்தூட்டு வந்தூடு.
ச.
என்னாத்தேயப்பா திருப்பி கொடுக்கரது? மருந்தையா கல்தாவையா?
S. M.
(சபாபதிக்கு ஒரு கல்தா கொடுக்க அவன் கூச்சலிட்டுக் கொண்டே போகிறான்.) அப்பா, இனி மேலே வர மாட்டான்! (பாட ஆரம்பிக்கிறார்) அங்கிங்கெனாதபடி-

கிருஷ்ணசாமி முதலியார் வருகிறார், அவர் பின்னால் சபாபதி மறுபடி வருகிறான்.
கி.
என்னா அத்தான், காபுரா பண்ணிகினு இருக்கிறீங்கள்?
S. M.
வா அப்பேன் வா!-வேறொண்ணுமில்லே, இந்த fellow பாட்டு கத்துகோணுமிண்ணா, அதுக்கோசரம் அவனுக்கு பாட்டு கத்து கொடுத்துகினு இருக்கிறேன்.
கி.
சபாபதியா பாட்டு கத்துகினு மிண்ணா? ஏண்டா, என்ன. கத்துகினே? பாடு கேப்போம்.
S. M.
பாட்ரா ! (சபாபதிக்கு கண் அடிக்கிறார்).
ச.
(பாடுகிறான்.) அங்கிங்கெனாபடி- அவ்வளவுதாம் பாட்டு கத்து கொடுத்தாருங்கோ.
கி.
அவ்வளவு போதும் இண்ணைக்கி, சாப்பாட்டுக்கு நாழி ஆச்சி! வாங்க போகலாம். (எல்லோரும் போகிறார்கள்)

காட்சி முடிகிறது.