பக்கம்:ஓர் விருந்து அல்லது சபாபதி.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

சபாபதி

S. M.
எனக்குத் தெரியாதப்பேன்.
K.
என்னமோ தெரிஞ்சவராட்டம் business எல்லா விசாரிச்சைங்களே?
S. M.
ஒரு உடூஸ் உட்டு பாத்தேன். வேறெ என்ன பேசறது? என்னாப்பேன்-இன்னும் கலெக்டர் வரலே?
K.
He will positively come! You see he has to come a long distance.

Enter Venkatasawmy Naidu.

S. M.
வாங்க நாயுடு! என்ன நாயுடுகாரு.-Indian Dressலே வந்தைங்களே!
V. N.
லேது! மீ கார்ட்லோ ஆர். எஸ். வி. பி. அனி ராசியுண்டிந்தே. அனி டிரெஸ்லோ ஒஸ்தினி.
S. M.
ஆர். எஸ். வி. பி. இன்னா என்னா அர்த்தம்?
V. N.
ரசம்-சாம்பார்-வடை- பாயசம் - அனி தலுக் கொண்டினி.
S. M.
ரொம்ப புத்திசாலி-நாயுடுகாரு-தீனிகிதா இங்கிலீஷ் சது வவலெ அனேதி. ஆர். எஸ். வி. பி. அண்டே Refreshments served very punctually அனி அர்த்தம். மீரு அட்ல போய் கூர்சண்டி, வஸ்தானு.
K.
என்னா அத்தான்? R. S. V. P. இண்ணா அப்படியா அர்த்தம்? reply if you pleaSe இன்னு சொல்ராங்களே.
S. M.
அதெல்லாம் முன்னே அர்த்தம், இப்போ அந்த அர்த்தம் எல்லாம் மாறிப் போச்சு. -அடே சபாபதி! இங்கே வாடா!
சபாபதி அருகில் வருகிறான்,

என்னடா செய்யரே அங்கே?
ச.
காபி எல்லாம் சரியா இருக்குதா இண்ணு பார்த்தேம் பா !
S. M.. 
Stupid goose! என்னா ஒதேகிதே கேக்குதா என்னா? இப்போ ஒண்ணும் தொடக்கூடாது! நீ கடைசியிலே மீந்தா என்னமானா சாப்பிடு.
ச.
அப்படித் தாம்பா போனதடவெ கூடச் சொன்னெ-ஒன் சிநேகிதருங்க ஒண்ணும் மீாவைக்கமாட்டாங்கப்பர்!
S. M.
அதெல்லாம் - ஒதவாது - ஒண்னும் தொடாதே. இப்போ. அதிருக்கட்டும். இப்பொ கலெக்டர் வரு