பக்கம்:ஓலைக் கிளி.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18


மறுநாள் பார்த்தால் அன்றும் தாமரைப்பூவைக் காணமுடியவில்லை. இப்படியே பல நாள்கள் நீலத் தாமரைப்பூத் திருட்டுப் போய்க்கொண்டிருந்தது.

அதனால் ராணிக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது. திருடனை உடனே கண்டுபிடிக்க வேண்டும் என்று அரசனிடத்திலே சொன்னாள். ராணி சொன்னால் அரசன் எந்தக்காரியத்தையும் உடனே செய்வான். அப்படியிருக்கும் போது திருடனைக் கண்டுபிடிக்க ஏற்பாடு செய்யாமலா இருப்பான்? உடனே அதற்கு வேண்டிய முயற்சிகளையெல்லாம் எடுக்கலானான்.

அந்தத் தாமரைக்குளம் அரண்மனைப் பூந்தோட்டத்தில் இருக்கிறதல்லவா? அந்தப் பூந்தோட்டத்தைச் சுற்றிலும் அரசன் காவல் வைத்தான். இரவு பகல் எந்த நேரத்திலும் அந்தத் தோட்டத்தின் நான்கு பக்கங்களிலும் போர் வீரர்கள் உருவிய கத்தியுடனே ஜாக்கிரதையாக நின்று கொண்டிருந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓலைக்_கிளி.pdf/15&oldid=1027472" இலிருந்து மீள்விக்கப்பட்டது